பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நூலிழை இவனுக்கு மது அது இல்லை. அதனால் ஒரு நம்பிக்கை; நம்பிக்கை தந்தது. நாட்டுப் பற்று அவனைத் தடுத்தது. அமெரிக்கா செல்ல முடியும். அதற்கு ஒரு நிதி உதவி பெற்றிருக்க முடியும். வளரும் கலைஞர் இனத்தைச் சேர்ந்தவன். நிச்சயம் தமிழ் அரசு அவனை அனுப்பி இருக்கும். தமிழ்க் கவிஞனை அது சாக விடாது; தமிழ் அறிஞர்களை மதிக்கும் அரசு அது. அவனுக்குத் தன் மருத்துவநண்பர் மீது நம்பிக்கை இருந்தது. அவர் நம்பிக்கை தருகிறார். ஆனால் உலகம் நம்பிக்கை தர வில்லை. பெற்றோர்கள் அவர்கள் செயல் அறுகிறார்கள். உற்றவர்கள் வந்து விசாரிக்கிறார்கள். இறுதிப் பயணத் துக்கு அவர்கள் விடை தருவது போல் இருந்தது. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் கள்ளச் சிந்தையராக அவர்கள் செயல்பட்டனர். 'ஒன்றும் ஆகாது; எத்தனையோ பேர் பிழைத்து இருக்கிறார்கள். நீ நல்லவன்; உனக்குக் கெடுதி வராது" என்று சொன்னார்கள். 'நல்லவர்களுக்குக் கெடுதி வராது' என்ற நம்பிக்கை நிலவுவதைக் கண்டு இவன் மகிழ்ந்தான். நன்மை வாழும்; இந்த நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி என்பதை அவனால் உணர முடிந்தது. காலையில் அவன் ஒவ்வொரு நாளும் வள்ளுவர் வாக்கைக் கேட்டு வந்தான். சாலமன் பாப்பையா தவறாது உலகுக்கு வள்ளுவர் வார்த்தைகளை உபதேசம் செய் கிறார். அவர் இறப்பு' என்பதைப் பற்றிப் பேசியது நினைவுக்கு வருகிறது.