பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 - நூலிழை எந்த நோயாளியும் தனக்கு அந்த நோய் வரும் என்பதை முதலில் ஒப்புக் கொள்வது இல்லை; அவன் ஒப்புக் கொள்ள வைக்கப்படுகிறான். அவன் நேசித்த முகங்களை ஒருபுறம் பார்க்கிறான். அறுவைக்கு அவன் இழுக்கப்படுகிறான். புதிய ஆடைகள் அவன் உடம்பை மூடுகின்றன. பின் அவர்கள் முடித் தருவதும் வெள்ளைநிற ஆடைதான். அதை அவன் எதிர்பார்த்துக் கொண்டுதான் போகிறான். தன் வசம் இழக்கிறான். விதி அதன் கையில் தன் கதியை ஒப்படைக்கிறான். நம்பிக்கையான மருத்துவர் தான்; யாரையும் இதுவரை அவர் கை வைத்துச் சாகடித் தது இல்லை; அவர்களே தம் நோய்க் கடுமையால்தான் செத்திருக்கிறார்கள். இவன் வெளி வருவதும் வராததும் அவர் கைத் திறனை மட்டும் சார்ந்தது இல்லை. இவன் நோய்த் திறனையும் ஒட்டியதாக இருந்தது. வெறும் படத்திலேயே அதன் இடம் திடம் கண்டு பிடிக்க முடிவது இல்லை. அறுத்த பிறகுதான் எதையும் அறிய முடியும். பிழைப்பானா? இல்லையா? ஒரு கவிஞன் மறை வானா? வெளியில் காத்து இருந்தவர் நம்புகிறார்கள்; எனினும் சில கீறல்கள் தோன்றத்தான் செய்கின்றன. 'அமரன் அவன்' என்ற நிலையை அவன் அடைய வில்லை. குமரன் அவன்' என்ற நிலையில்தான் வருவான் என்று நம்பினர். கவிஞன் சாக மாட்டான். அவன் எழுத வேண்டியது காத்திருக்கிறது. பூங்கா வெறிச்சிட்டுக் கிடக்கிறது. கவி பீடமாக அது மாறத்தான் போகிறது.