பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் - 51 'மரணத்தின் வாசலில்' என்று எழுதியது அவன் இறுதிக் கவிதை. அவன் பிழைத்து வருவான்; வந்தபின் கவிதை எழுதுவான்; அதற்கு அவன் கொடுக்கும் தலைப்பு நிச்சயம் இதுவாகத்தான் இருக்கும். நூலிழை என்பது தான் தலைப்பாக இருக்கும். சாவுக்கும் வாழ்வுக்கும் இடைவெளி இதுதான்; அது அவன் கண்டு எழுதியது; பொருத்தமான தலைப்பு. 7 சுமை குறையாது சாராயம் குடித்தார்கள்; சாவினைச் சந்தித்தார்கள்' 'விஷம் அருந்தினார்கள்; பெண்கள் கூட இறந்துவிட்டார்கள்; ஒரு தாயின் பாலைக் குடித்த இரண்டு வருஷக் குழந்தை அதுவும் இறந்துவிட்டது'. கொடுமையான சாவு; அதைப் படம் பிடித்துக் காட்டினார்கள். பெண்கள் கதறி அழுவது இவர்களுக்கு ஒரு காட்சி யாக அமைகிறது. வாய்விட்டு அழுகிறார்கள். இறந்தவர்களுக்காக மட்டும் அல்ல; இனி வாழப் போகிறவர்களை நினைத்தும் don-L. உழைக்கும் கரங்கள்; அவர்கள் தம் உழைப்பை நிறுத்தி விட்டார்கள். கை கால்களை நீட்டி விட்டார்கள்