பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சுமை குறைய்ாது செய்தார். 'அம்மணி என்பதை நினைத்துப் பார்க்கிறார். இது தமிழைக் கொச்சைப்படுத்துவது போல இருந்தது. 'எனக்குத் தெரியாது; யாரும் சொல்லவில்லை' என்பது இவர் தொலைபேசித் தொடர்பு. 'இந்தக் கார் இப்படிப் பள்ளத்தில் விழும் என்று எதிர் பார்க்கவில்லை. அப்படியே சுக்கு நூறாகச் சிதைந்தது.” என்றார் நண்பர் டிவி தொடர் கதைகளில் வந்து விழும் சஸ்பென்சாக அந்தச் செய்தி இருந்தது. அதை வைத்துத்தானே அவர்கள் கதையை ஒட்டுகிறார்கள். மேலே தொடர்ந்து இவரால் கேட்க முடியவில்லை; அதிர்ச்சிகள் அடக்க விலையில் அமைய இருக்க வேண்டுமே என்று அவர் வேண்டிக் கொண்டார். 'உள்ளிருந்தவர்கள்?’’ டிரைவர் தவிர மற்றவர்கள் பிழைத்துக் கொண்டார் கள்' என்று சாவதானமாக விரித்து உரைத்தார். 'கவலை இல்லை; இன்சூரன்சு நிதி வரும்' என்று அந்த அவலத்துக்கு ஒரு ஆறுதலும் தெரிவித்தார். காருக்கு?” 'அது சுட்டு வைத்த அப்பளமாக நொறுங்கி விட்டது' என்றார். அவரால் உவமை இல்லாமல் கூற முடியாது என் பதைக் காட்டினார். 'பிரதமர் நிதியிலிருந்து ஏதாவது உதவி கொடுத் திருக்கலாம்' என்று தோன்றியது. தனிப்பட்டவர் சாவுக்கு அரசு பொறுப்பு ஏற்க முடியாது. பஸ் குறுக்கே மோதினால் மாநில அரசு