பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 55 உதவும்; ரயில் மோதத் தவறு நேர்ந்தால் கேட்மனிதன் தூங்கினான் என்று தெரிந்தாலும், ரயில்வே என்ஜின் கோளாறு ஆக இருந்தாலும் ரயில்வே அமைச்சர் உதவித் தொகை தெரிவித்திருப்பார். 'பள்ளத்தில் விழுகிறவர்களுக்கு எல்லாம் அரசு எப்படிக் கை கொடுத்து உதவ முடியும்? அது பாரதி அல்ல; விழி தந்து பதவி தர' 'இதற்காகவா இவ்வளவு வேதனை வருத்தம்; விடுங்கள் கார் வேறு வாங்கிக் கொள்ளலாம்'. "என் மனைவியைவிட அந்தக் காரைத்தான் நேசித்தேன்; அது வந்த போதுதான் தொலைபேசித் தொடர்பு கிடைத்தது. காத்துப் பதிவு செய்த காஸ் சிலிண்டர் கிடைத்தது' என்று அடுக்கிக் கொண்டிருந்தார். அவர் சொன்ன உவமை தான் எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்ததார் என்பதைக் காட்டிக் கொடுத்தது. அவரே முழுமையாக நேசிக்காத அவர் மனைவிக்கு இரங்கற்பா தயாரித்தது எவ்வளவு தவறு என்பது பட்டது. "அதை எடுக்கவே இல்லையா' 'அது தானே விரும்பிச் சேற்றில் விழுந்துவிட்ட பிறகு நாம் ஏன் எடுக்க வேண்டும். போகட்டும்; அது விதி அவ்வளவுதான்” என்று அவரே ஆறுதல் அடைகிறார். 'பஸ் மோதி இருந்தால் மாநில அரசு உதவித் தொகை தந்திருக்கும்; பத்திரிகைகளில் அச்சிட்டு இருப்பார் கள்; ரயில் மோதி இருந்தால் மத்திய அரசு கூடுதல் தொகை கொடுத்து இருக்கும். எருமைதான் மோதியது; எங்கள் துரதிருஷ்டம்' என்றார். 'அது சேற்றில் விழுந்துவிட்டது; அதை எடுப்பது சரி இல்லை' என்கிறார். "என்ன இருந்தாலும் அது சேற்றில் விழுந்து இருக்கக் கூடாது. பார்க்கவே பிடிக்காது;