பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 57 ခြီ விழிப்பு சில சந்திப்புகள் நாம் விரும்பி ஏற்படுத்திக் கொள் கிறோம்; சில நாம் விரும்பாமலும் ஏற்படுகின்றன. இந்த மனிதர் இவருக்கு உதவி செய்தார்; அதனால் இந்தச் சந்திப்பு ஏற்பட்டது. பொட்டல் காடாக இருந்த இடம்; அதைத் திட்ட மிட்டுத் தொழிற் பேட்டை ஆக்கினார்கள். அதை ஒதுக்கித் தந்தார்கள். அப்பொழுது கவர்னர் ஆட்சி, அதனால் ஒரளவு எல்லாம் ஒழுங்காக நடந்தன. மேல் மட்டத்தில் யாருக்கும் எதுவும் கொடுக்கத் தேவை இல்லை. சட்டப்படி எல்லாம் ஒழுங்காக நடைபெற்றது. அச்சுக் கூடம் ஒன்று இவர் நடத்தி வந்தார். அதைக் காட்டி அந்த இடத்தில் தனக்கு ஒரு 'பிளாட் ஒதுக்கித் தர விண்ணப்பம் இட்டு வைத்தார். இந்த வழுக்கைத் தலை அப்பொழுது பரிச்சயம் ஏற்பட்டது. அவர் முகம் இவருக்கு அறிமுகம் ஆயிற்று; எப்படி விண்ணப்பம் பூர்த்தி செய்வது என்பது அவர் காண்பித்துத் தந்தார். அவர்கள் கேட்கின்ற வரைவுகள் திட்ட விளக்கங்கள், சட்ட திட்டங்கள் அவற்றை அறிந்து விண்ணப்பம் செய்வது ஒரு பெரிய சாதனை, "முட்டாள் தனமாக இவர் ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். அச்சுத் தொழில் அதை எடுத்து நடத்தித் தனக்குத் தெரிந்தவரை