பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிளிஞ்சல்கள்

61



வேண்டியதுதான். வயசு வந்த பெண் அவளைக் கட்டிக் கொடுத்துக் கடமையைச் செய்யுங்க; பிஞ்சு அவள் விடும் குஞ்சுகள் அவர்கள் உன் பேரன் பேர்த்திகள் அவர்கள் தாம் ஆதரவு. அவர்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டியதுதான்."

"அவர்களைப் படிக்க வைத்து மாமேதைகளாக ஆக்குங்கள். அதுபோதும்" இப்படிச் சில கனவுகளை எடுத்து உரைப்பது என்று இவர் கணக்கிட்டு மெனக்கிட்டு அவர் இல்லம் தேடிச் செல்கிறார்.

அவர் மனைவி சாகவில்லை. அழைப்பு மணி அடித்ததும் வந்து கதவைத் திறந்தாள்.

'இருங்கள்' என்றாள்.

சோபாவில் இவர் சொகுசாக அமர்கிறார்.

"என்ன வேணும்? ஹார்லிக்ஸா கூல்டிரிங்ஸா ஒரு வேலையாள் இந்த வினாவை எழுப்புகிறான். ஹாட் டிரிங்க்ஸ் குடிக்க வேண்டும் போல் தோன்றியது.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடியில் பிறந்தவர் அவர். இப்பொழுது 'கல்' வியாபாரம் தொடர்ந்து செய்கிறார்; கல்தோன்றி யதால் தான் நாங்கள் இந்தத் தொழிலைச் செய்கிறோம். எங்கள் குடி உயர்கிறது என்று பேசிக் கொண்டே வந்தார்.

"எப்படி உங்கள் தொழில்?"

"அதே கல்தான்; ஏறும்; இறங்கும்; நடக்குது" என்று பதில் சொல்கிறார்.

"மனைவி தவறிவிட்டது" என்று வாய் எடுக்க முனையவில்லை.

நகைகள் நிறைய அணிந்து வகையாக இருந்த புதிய வனிதை ஒருத்தி நடமாடும் போது எப்படிக் கேட்க முடியும்?