பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

விழிப்பு



அவரே தொடர்ந்தார். "மூத்தவள் தவறிவிட்டாள்; என்ன செய்வது? அழுதால் அவர்கள் எழவா போகிறார்கள்? மகள் அவள் படிக்கிறாள். அவளுக்கு விரைவில் மணம் முடிக்க வேண்டியதுதான். இருந்து வீட்டை நடத்தச் சேலை கட்டிய மாது ஒன்று தேவைப்பட்டது. இவர்கள் என் இரண்டாம் தாரம்" என்று அறிமுகம் செய்கிறார்.

துக்கம் விசாரிக்கத் தேவை இல்லை; அதன் அடையாளம் புல் பூண்டு எதுவும் இல்லை; ஏதாவது பேச வேண்டுமே எதைப் பற்றிப் பேசுவது? வழுக்கைத் தலை இவர் நினைவுக்கு வந்தது.

"அந்தப் பரசுராமன் மிக நல்ல மனிதர்; பாவம் அந்தவீடு எதுவுமே இல்லை பொலிவு இழந்துவிட்டது."

"நீங்கள் படம் ஒன்றும் மாட்டி வைக்க வில்லையா?” என்று கேட்கிறார்.

"படத்தை வைத்து வழிபாடு நடத்த விரும்ப வில்லை. எதுதேவையோ அதை முடிவு செய்துதான் என் வாழ்க்கையை நடத்துகிறேன். மறைந்த மாநகர்களைக் கட்டிக் கொண்டு மர்மக் கதைகளை எழுதவிரும்பில்லை. இன்று எனக்கு ஒருத்தி தேவை; அவள்தான் இவள்; பழங்கனவில் நான் வாழ விரும்பவில்லை; எந்த வயதிலும் யாரும் துணையில்லாமல் வாழ முடியாது” இது அவர் தத்துவம்; கொள்கை; கோட்பாடு.அதை அவரிடம் பேசித் தெரிந்து கொள்ள முடிந்தது.

"நீங்கள் படம் எதுவும் மாட்டி வைக்கவில்லையா" என்று மறுபடியும் கேட்கிறார்.

"எதுக்குக் கேட்கிறீங்க?"

"இல்லை என் நண்பர் ஊதுவர்த்தி வியாபாரம் செய்கிறார். அவருக்காக விசாரித்தேன்" சமாளித்துப் பேசினார்.