பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 63 'தேவை இல்லை; அது எல்லாம் நீடிக்காது. அவள் படத்தை மாட்டி வைக்கிறேன் என்று வைத்துக் கொள் ளுங்கள். ஒவ்வொருத்தரும் அவளைத் தங்கம் என்பார் கள். இந்த வெள்ளி இங்கே முளைத்து இருக்கிறது. இது மனசு புண்படும். அந்த இடத்தைத் தான் பிடித்து விட்டது போன்ற குற்ற உணர்வு இருக்கும். ஏன் இந்தத் தொல்லை? நமக்கு இந்தத் தலைவர்கள் படம் அது எல்லாம் பிடிக்காது' என்று ஒரு அடி அடித்தார். அவர் நினைவில் அந்த அம்மையார், பரசுவின் துணைவியார் அவள் பூஜித்து வரும் படம்; அந்த ஊதுவர்த்தி நினைவுக்கு வந்தது. 'இதோ பாருங்க! இப்பத்தான் பாராளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு இடம் கேட்கிறார்கள். ஒரு நாளைக்கு அவர்கள் பாதிக்கு மேல் வந்து விடுவார்கள். எல்லாம் தலைகீழாக மாறும்’ என்று கல் வியாபாரி கூறினார். அவர் எதை நினைத்துக் கூறினார் என்று தெரிய வில்லை. அர்த்தமுள்ளவை என்று மனதில் இவருக்குப் படிகிறது. நாட்டில் விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கிறது என் பதை உணர முடிந்தது. |