பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வெட்கக் கேடு 9 வெட்கக் கேடு 'மார்க்கு 120 வாங்கி இருக்கிறேன்' '160 வாங்கவில்லை என்றால் இடமில்லை' சாதிக்கு என ஒரு காலத்தில் இங்கு இடம் கிடைத்தது; இன்று மதிப்பெண்களைச் சொல்லித் தான் இடம் கேட்க முடிந்தது. இருநூறுக்கு நூற்று இருபது: அவ்வளவுதான். அவனால் ஈட்ட முடிந்தது. "பதிவு செய்திருக்கிறேன். நீங்கள் உதவி செய்ய வேண்டும்' என்று கூறுகிறான். ஒரு காலத்தில் அவர் பேராசிரியர் என மதிக்கப் பட்டவர். அந்தக் கல்லூரியில் அவருக்கு உள்ள தொடர்பு மாலை மரியாதையுடன் நீங்கி விட்டது; என்றாலும் அவருக்கு ஒரு முத்திரை, அந்தக் கல்லூரி அவர் கையில் இருப்பதாக இந்த நூற்றிருபது நினைக்கிறான். 'நீங்கள் மனசு வச்சால் முடியும்; பிரின்சிபால் நீங்கள் சொன்னால் கேட்பாரு, நீங்கள் நினைத்தால் நிச்சயம் வாங்கிவிட முடியும்' அவனுக்கு எப்படிப் பேச வேண்டும்? எப்படிப் பிறரை வளைக்க முடியும்? இந்தக் கலை அவனுக்குக் கை கொடுக்கிறது. ஜாங்கிரி வளைப்பது போல் பிடிப்பவரைப்