பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வெட்கக் கேடு 'ஒ' பேராசிரியர் எழுதிக் கொடுத்தாரா? அவர் நல்லவர். எங்களுக்கு நண்பர். என்னால் மறுக்க முடியாது தம்பி! ஒரு வாரம் பொறுத்து வா! பார்த்துச் சொல்கிறேன், இவர் உடன் தொழில் செய்தவர் வயது தளராத காரணத் தால் அங்கு அப்பணி செய்பவர். பாவம் அவர் என்ன செய்ய முடியும். நிர்வாகம் பேராசிரியருக்கு எங்கே மதிப்புத் தருகிறது. முதல்வரையே அவர் சென்று பார்க்க முடியாது; அது அறுவடைக் காலம்; இவரால் எப்படி உள் நுழைய முடியும்? அமைச்சர்களின் கடிதங்கள் அவற்றையே அவர் சேர்த்து வைத்திருக்கிறார். மிரட்டல் அறிவிப்பு வருகிறது. பணிகிறார். சில மாணவர்கள் மதிப்பெண்கள் இல்லாம லேயே மதிப்புப் பெறுகின்றனர். இந்தப் பேராசிரியர் இதைக் கவனிக்கும் அலுவலர் அவரை அணுகுகிறார். 'நூற்று அறுபதுக்குக் குறைவாக யாரையும் எடுப்ப தில்லை. நீங்கள் மறந்து விடுங்கள். அந்தப் பையனை வேறு இடத்தில் முயற்சி செய்யச் சொல்லுங்கள்' இது அலுவலர் அறிவுரை. "பேராசிரியர் தம்மால் இயலாது என்று சொல்லி விட்டார்” இது மாணவன் மறுமுறையீடு. 'என்னதான் சொல்கிறார்?' 'அவரை மன்னிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறார். மதிப்பெண் போதாது” என்று கூறுகிறார். "ஏன் இந்த மதிப்பெண்கள்?' இதற்குப் பல்கலைக் கழகம் அனுமதி தராதா? 'இல்லை சார்! மதிப்பெண் அடிப்படையில்தான் இடம் தருகிறார்கள். ரொம்பவும் கடுமையாக இருக்கிறார் கள். அப்படி அவர் சொல்கிறார்.'