பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 புதுக்கவிதை கவிதையில் ஏற்பட்ட மாற்றம்; புதுக் கதைகள் புதுக் கவிதைகளைப் போலப் புதுப் பிரச்சனை களைச் சந்திக்க எழுவது. நேரிடை வாழ்க்கையத் தொடுவது; இவ்வகையில், இது ஒரு புதிய முயற்சி, கதை வடிவில் புதிய பரிசோதனையும் ஆகிறது. எந்த முன்மாதிரியும் இதற்கு என்று எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதுவே இத்துறையில் முன் மாதிரியாகப் படைக்கப்பட்ட வடிவம். கதை என்பது உள்ளுறை உவமம் போன்றது: சிந்திக்க வைப்பது; வாசகர்களோடு கருத்துகளைப் பரி மாறிக் கொள்வது. நண்பர்களுடன் உரையாடுவது போன்ற அமைப்பைக் கொண்டது. எந்தப் பிரச்சாரமும் செய்ய இவை எழுதப்படவில்லை; செய்திகளை உணர்த் துவது; தீர்வுகளைக் காண்பது; உள்ளதை உள்ளவாறு காட்டுவது; இவை இக் கதைகள் உணர்த்தும் உண்மைகள். சுவைகள் இவற்றை இயக்குகின்றன. நகைச் சுவைக்குத் தரப்படும் சிறப்பு இறுதியில் இடம் பெற்றுள்ள கதைகள் காட்டும். நிகழ்ச்சிகளை நகைச்சுவையோடு சித்திரிக்க எடுத்துக் கொண்ட முயற்சி ஈற்றுக் கதைகள். இந்நூல் மகிழ்விக்கும்; சிந்தனையைத் துண்டும்; பயன் உடையது. ரா. சீனிவாசன்