பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வைர மோதிரம் நிச்சயம் மருமகள் அவள் முகம் காட்டுவாள். 'இந்தக் கிழம் எனக்கு ஒரு கயிற்று முழம்' என்று பேச வாய்ப்பு உள்ளது. 'இந்தக் கிழம் கட்டைகளை நான் ஏன் சுமக்க வேண்டும்' என்று பேசினால் என்ன செய்வது? யாருக்கும் சுமையாக இருக்கக் கூடாது; மனைவி தான் விட்டுச் சென்றாள். தான் கட்டி வைத்துக் குடி யிருக்கும் வீடு இருக்கிறது. அவர் கண்கள் அந்தச் சமையல் அறையை நோக்குகிறது. தண்ணிர் தவறாது வரும் குளியல் அறை தெரிகிறது. வட்ட மேசை மாநாடு நடத்த அவர் வாங்கிப் போட்ட மேசை நாற்காலிகள் இருக்கின்றன. பரிமாறத் தட்டு கரண்டிகள் பட்டவர்த்தனமாகக் கிடக்கின்றன. கட்டில் போட்ட அறை, வட்ட வடிவான காற்று விசிறி, திட்டமிட்ட அறை, தான் படித்து ஒய்ந்து ஒதுக்கி வைத்த பழைய புத்தகங்கள். வேண்டுவது ஒன்று; பணி செய்ய ஒரு மனித நேயம்; அது ஆணா, பெண்ணா அவர் எதிர்பார்க்கிறார். "தாத்தா என்ற குரல் வெளியே அழைக்கிறது. மனிதநேயம் அந்தக் குரலில் ஒலிக்கிறது. 'வா தாத்தா நம்ம வீட்டுக்கு' அவன் அழைப்பு: அவன் பின் மருமகள் மகன் இவர்கள் அணிவகுப்பு. பாசம் அவரைத் தழுவுகிற நேரம்; அவரைக் கரம் நீட்டி அழைக்கின்றது. பேரன் அவன் சிரித்த முகம்; அவரைச் சீராக்குகிறது. தன் கைவிரல்களுக்கு அவன் வைர மோதிரம் அணிவதைப் போல இருந்தது.