பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 73 'பாலியல் தொழிலாளி என்று கதையைத் தொடங் கினான். அவர்கள் டெல்லியில் கோட்டையை நோக்கிக் கொடி பிடித்தது நினைவுக்கு வருகிறது. "Sex Workers" என்று அவர்கள் கொடி பிடித்தார்கள். அதன் தாக்கம் இவன் இந்தச் சொல்லைப் படைத் திருக்கிறான் என்பதை அறிய முடிந்தது. 'இவர்களைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? எப்படித் தெரியும்?' 'வக்கிரங்கள் இவற்றை இன்று வார இதழ்களில் விரிவாக எழுதுகிறார்கள்; படிக்கிறேன்; அவற்றை வைத் துக் குறிப்பு எடுத்து வைத்திருக்கிறேன். விரிவாக எழுத முடியும்' என்று பதில் கூறுகிறான். 'சென்னையில்’ என்று ஒரு வாரம் வருகிறது: அடுத்த வாரம் திருச்சியில்' என்று விளம்பரம், இனி மதுரை, விருத்தாசலம் அரட்டை அரங்கு போல் ஒவ் வொரு ஊருக்கும் சென்று செய்திகள் சேகரித்து எழுது வார்கள் என்று தெரிகிறது. 'இதை வைத்தா கதை எழுதப் போகிறாய்?" 'அவர்கள் சர்குலேஷன் இதற்குப் பிறகு இரட்டிப் பாகி இருக்கிறது. இது நல்ல subject' என்று விளக்கம் தந்தான். 'இதற்கு predicate வேண்டும். பார்த்து கவனமாக எழுது, தப்பு இல்லாமல் எழுது, அனுபவமில்லாமல் எழுதினால் பிழைகள் வரும்' என்கிறார் இவர். 'வாசகர்களுக்கும் அனுபவம் இருக்காது, அவர் களால் தவறுகளைக் காண முடியாது' என்று நம்பிக்கை தெரிவித்தான்.