பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 77 'அதுதானே இன்றைய பிரச்சினை கட்டக் கூடாது என்று எதிர்கட்சிகள் பேசுகின்றன. நீ கட்ட வேண்டும் என்கிறாய்.” "அது அயோத்திப் பிரச்சினை. இராமர் பிறந்த இடம். அது வேறு; இது வேறு' என்று விளக்குகிறான். 'தயவு செய்து மன்னிக்கவும். தெய்வத்தின் பேருக்குக் களங்கம் விளைவிக்க விரும்பவில்லை. நீ போகலாம்'. என்கிறார். அவன் தெய்வத்தைக் காட்டி அரசியல் செய்கிறான் என்பதை உணர முடிந்தது. இரண்டு இளைஞர்கள்; படிக்கிறவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். கையில் கிழிந்த நோட்டு அதனை நீட்டுகிறார்கள்; கிழியாத நோட்டுக் கேட்பது போல இருக்கிறது. இவர் பொறுமை எல்லை கடக்கிறது. 'இந்த நன் கொடை நாட்டின் உள்ளுருக்கி நோய்' என்று முணு முணுக்கிறார். "என்னப்பா வேண்டும்?' 'நாங்கள் பட்ட வகுப்புப் படிக்கிறோம்;. பொருள் உதவி தேவை என்கிறார்கள். அவர்கள் தமிழ்ப் பற்று இதில் தெரிகிறது. இவர் பதில் சொல்லவில்லை. பச்சைத் தமிழில் சொன்னால் புரியவில்லை என்று நினைக்கிறார்கள். 'டொனேஷன்' என்று பழகு தமிழில் விளக்குகிறார்கள். அந்தச் சொல்லுக்கு உயர் பொருள் உள்ளது என்பதை அவர்கள் வற்புறுத்துவது போல இருந்தது. - . 'உனக்கு எவ்வளவு வேண்டும்?' அதில் பரிவு கலக்கிறது.