பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நன்கொடை ‘விருப்பம் போல் தரலாம்' அவர்களுக்கு நம்பிக்கை மிகுகிறது. உயரப் பறக் கிறார்கள். அழகப்பா வள்ளலிடம் அளவளாவுவது போல் இருந்தது. . நான் இல்லை என்று கூறினால்; மறுத்தால்?” 'உங்கள் விருப்பம்' 'அவர்கள் மனநிலை சான்றோர் நிலையை ஒத்திருந் தது. உயர்விலும் தாழ்விலும் சமநிலை காண்பவர் அறிஞர் கள். அவர்களைச் சான்றோர்கள் என்று கூறுவது மரபு. இந்தச் சான்றோர்கள் அவர்கள் சால்பு இவரைக் கவர்கிறது. 'நோட்டு ஒன்று நீட்டுகிறார். அதிகம் இல்லை; அளவானதுதான். விரல்கள் எண்ணிக்கைதான்; பத்துமா?" என்கிறார். . அவர்கள் பற்றிச் சொல்கின்றனர். வாழ்க்கைப் பங்காளி வீட்டில் உள் இருந்து வருகிறாள். 'உங்களுக்கு என்ன பைத்தியமா? வருகிறவர் களுக்கு எல்லாம் கொடுத்தால் நாம் பிச்சை எடுக்க வேண்டியதுதான்; படித்த இளைஞன் படி ஏறி நிற்கிறான். பிச்சை கேட்கிறான்' என்று கடிந்து உரைக்கிறாள். நண்பர் இவர் ஒத்தவயது; இவரைத் தேடி வருகிறார். 'இவரும் ஏதாவது கடன்?' 'யார் அந்த பசங்க?" 'பட்டப் படிப்புப் படிக்கிறார்கள். அந்தத் திட்டத் துக்குப் பொருள் உதவி கேட்டார்கள்'. 'அட பயித்தியக்காரன் நீ; இவர்கள் பட்டம் பெற்ற வர்கள்; படித்து முடித்தவர்கள்' என்கிறார்.