பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 81 கேட்டதற்கு இவர் பதில் சொல்லி விட்டுப் போவது தானே; சில மேடைப் பேச்சாளர்கள் கைத்தட்டல்கள் வாங்குகின்றனர். அந்தக் கவர்ச்சி இவரையும் பிடித்தது என்பது அவன் மதிப்பீடு. இவனுக்குப் புதிரா புனிதமா என்ற வினா எழ வில்லை. அது புதிரும் அல்ல; புனிதமும் அல்ல; ஆண் பெண் உறவு; அது சீறி எழுந்து ஆறி அடங்குவது என்பது இவனுக்குத் தெரியும். அன்பும் பாசமும் எதுவரை என்ற வினாதான் இவனுக்கு எழுந்தது. ஈருடல் ஒருயிர்' என்று சொல் வதெல்லாம் கவிதை; இவ்வாறு அளப்பதைக் கேட்டிருக் கிறான். இவன் சந்தித்த இவர்கள் இரண்டு உயிர்கள்; இரண்டு உடல்கள். இதுதான் சரி என்பது அவனுக்குத் தெரிந்தது. இவர்கள் வாழ்க்கையில் பிணைப்புப் பெறுகிறார் கள்; வாழ்கிறார்கள். இணைப் பறவைகள் என இணைந்த வராகின்றனர். இப்பொழுது துணை ஒருவருக்கு ஒருவர் என்ற நிலையை அடைகின்றனர். இதுவரை அவன் அறிந்தது இது; அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பது எதுவரை, சுமைகளைத் தாங்குவது எதுவரை என்ற வினா இவனை அரிக்கிறது. எப்படியோ அந்தப் பெரியவர் இவனுக்குப் பழக்கம் ஆகியிருக்கிறார். காரணம் அவர் தமிழ் பேசினார். அது பிழையில்லாமல் இருந்தது. அது இவனைக் கவர் கிறது. சுத்தத் தமிழ்’ என்பது அவரிடம் எப்படியோ குடிகொண்டு விட்டது. அவர் பேசுவது புத்தகம் படிப்பதுபோல் இருந்தது. ஒற்றுப் பிழையும் நேராமல் பேசுவது இவனை வியப்பில் ஆழ்த்தியது.