பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கடைசி வரை பூவும் பொட்டும் அதைக் காட்டி அவருக்குச் செலுத்த வேண்டிய மரியாதையைச் சுட்டிக் காட்ட விரும்புகிறான். வெடித்தது பூகம்பம்; அந்தத் திருவாசகம் அங்கு இல்லை; அதனால் பத்திரிகைத் தலையங்கம் அந்த அம்மையாரால் எழுத முடிந்தது. 'நீங்கள் மதிக்கிறீர்கள்; என்னால் அவரை மதிக்க முடியாது” 'இந்த வாசகங்களைப் படிக்கிறார்; குடும்பப் பற்றே காட்டுவது இல்லை'. 'இவர் ஒரு மனிதார? பாசம், பந்தம் இவை இவரை விட்டு நீங்கி விட்டன”. 'அரவிந்தர், தபோவனம், சாமியார் இந்தப் பைத்தியம் இவரைப் பிடித்துக் கொண்டிருக்கிறது'. 'அவர் என்ன செய்கிறார்? கையில் இருக்கும் ஏடுகளை வைத்துக் கொண்டு பாடுகிறார்'. 'யாராவது வந்தால் அவர்களிடம் தத்துவம் பேசு வது; பாட்டு அதில் உள்ள தெய்வீகம் இதைப் பங்கிட்டுக் கொள்வது; நினைத்தால் தல யாத்திரை, இப்படி இவர் நடந்து கொள்கிறார். அவரைத் திருத்தவே முடிய வில்லை'. 'இவர் இந்த வீட்டுக்கும் சுமை; ஏன் நாட்டுக்கும் சுமை' என்று துணிந்து தலையங்கம் எழுதினார். அந்த அம்மையார். இருவர் உறவு இதற்கு இடையே உள்ள பிளவு இவனால் அறிந்து கொள்ள முடிகிறது. சலிப்பு என்பது எந்த நீட்டிப்பிலும் உள்ளது என்பதை அவனால் சிந்திக்க முடிகிறது.