பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 அடி சறுக்கியது அந்த டீ குடித்ததற்காகாவது அவன் அடுத்த 'எபிசோட் கேட்டுத்தான் ஆகவேண்டும். இப்பொழுது டி.வியில் இருநூற்று ஐம்பதுக்கு மேல் போகிறது; கதையை நீட்டிக் கொண்டே போகிறார்கள். புதிய நடிகர்கள் வர வாய்ப்புத் தடுக்கப்படுகிறது. இந்த நடிகர்கள் இந்த சீரியலிலேயே நடித்து ஒய்வு ஊதியமும் பெற்று விடுவார்கள். கதைப் பாத்திரம் முக்கியமானவள்; அவள் தாய்மை அடைகிறாள்; அது காட்டியது இரண்டு வருடங்களுக்கு முன்பு: இது நூறாவது எபிசோட் கடந்து விட்டது. இரண்டு வருடம் கடந்து விட்டது. இன்னும் அவள் குழந்தை பெறவே இல்லை. காரணம் கதை வாரத்தில் அரைமணி நேரம்தான் காட்டப்படுகிறது. பிறகு மூன்று வருடம் படம் ஒடுகிறது. அதற்குப் பிறகுதான் அவள் பிரசவ வேதனை அடைகிறாள். என்ன செய்வது? டி.வி சீரியல் அது. இவன் சொல்லுகிற அடுத்த கதை கேட்டுத்தான் ஆக வேண்டும். மெக்கானிக்கோ வந்தபாடில்லை; அங்கே கத்தும் குரல் ஒசை எதுவும் காதில் படுவதாக இல்லை. அவனுக்கு அடிபணிய வேண்டியதுதான். அவன் தன் சுயசரிதத்திற்கு வந்து சேர்ந்தான். ஒரு புதிர் எழுப்பினான். அது அவனைத் தேர்வு செய்த போலீசு அதிகாரி கேட்ட கேள்வி என்று அறிவித்தான். 'நீ வேகமாகக் காரை ஒட்டிச் செல்கிறாய்; ஒரு கிழவி குறுக்கே மெதுவாக நடந்து வருகிறாள்; அப்பொழுது நீ என்ன செய்வாய்?" அதற்கு இவன் சொன்ன பதில் 'பேசாமல் அவள் மீது ஏற்றி அவளைக் கொன்று விடுவேன்' என்று பதில் உரைத்தான். "ஏன் பிரேக் போட்டால்?"