பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 93 'அப்பொழுதும் அவள் சாவது உறுதி.' 'திருப்பிச் சாய்த்து ஒட்டினால்' 'வண்டி பள்ளத்தில் விழும்; என் வண்டியில் உள்ள எட்டுபேர் என் திறமையை நம்பி ஏறியவர்கள். தினம் பேட்டா கூடுதலாகக் கொடுத்து என்னை போஷிக்கிறவர் கள். என் எஜமானர் அவர். குடும்பம் அவ்வளவு பேரையும் இந்த டி.விக்காரர்கள் வந்து மொய்த்துக் கொள்வார்கள்; இதுதான் நடந்திருக்கும்' என்று விளக் கினான். அந்த அதிகாரி அவனைப் பாராட்டியதாகப் பெரு மையோடு கூறினான். இன்னும் மெக்கானிக் வந்தபாடில்லை; சோதனை மேல் சோதனை என்பதுபோல் அவன் கதைகள் தொடர்ந் தன. மெக்கானிக் எப்பொழுது வருவார் என்று கண் வைக்க வேண்டி இருந்தது. "கொஞ்சம் பொறுங்கள். அவர் வந்தால் ஒரு ஒட்டு ஒட்டிப் பார்த்து உடனே சரி செய்வார்' என்றான். அந்த வண்டி breakdown என்பது அவனுக்கு அறி விக்கப் பட்டது. பிரேக் வேலை செய்யவில்லை. அது பழுது பார்க்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. 'எல்லாம் சரிசெய்து விடுவார். ஒரு ரவுண்டு எடுத்துப் போனால் போதும். அவர் உடனே கை வைத்துச் சரி செய்து விடுவார்' என்று பதில் கூறினான். அவன் மூளை Fail ஆகிவிட்டது என்று எடுத்துக் காட்டினார் இவர். "என்ன சார் அந்த போலீசு அதிகாரியே என் புத்திசாலித் தனத்தைப் பாராட்டினார்'.