பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தகுதிகள் 'நீ ஒட்டக் கற்றுக் கொள்ள முடியாது; கார் ஒட்டி தேவைதான். என்ன செய்யலாம்? ' வீட்டுக்கு சமையல் காரி தேவைப்பட்ட்து. அவன் என்ன செய்தான்? நாள் ஏட்டில் விளம்பரம் தரப்பட்டது விதவை ஒருத்தி வீட்டோடு இருக்கத்தேவை' என்று கொடுத்து வைத்தான். விசாரணைக்கு இவன் வீட்டை நோக்கி வந்து சென்ற வர்கள் பலர்; உண்மை விதவைகள் நற்சான்றோடு வந்து சேர்ந்தார்கள். 'இவள் உண்மையில் விதவை என்ற நற்சான்றோடு வந்தவர்கள் சிலர். தாலியோடு ஒருத்தி வந்து சேர்ந்தாள்; இதை இவன் எதிர்பார்க்கவில்லை. அவளோடு பேச்சுத் தரவேண்டியிருந்தது. வீட்டில் அவன் துணைவியார் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வரும்வரை துணை சபா நாயகர் பதவியில் அமர வேண்டி நேர்ந்தது. 'நாங்கள் விதவைக்குத்தானே விளம்பரம் தந் தோம்?” "அப்படி ஆக முடியவில்லை; சூழ்நிலை அப்படி” என்று தத்துவம் பேசுகிறாள். - ‘'நீ என்ன சொல்றே” நான் விதவை மாதிரிதான். என் புருஷன் அவர் ஒன்றுக்கும் உதவாதவர். ஒருத்திக்கு அவர் தேவைப் பட்டார். இழுத்து வைத்துக் கொண்டாள். அதனால் அவர் என்னோடு இல்லை'