பக்கம்:கிழவன் கனவு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழவன்கனவு (12) யில் ஏராளமான ரத்தினங்களைக் கொட்டுவார் கள் என்பதை ஆரியம் நன்றாக அறியுமல்லவா? ஆகவே மார்க்கண்டேயரும் மற்ற இருவரும் கூடி வல்லப கணபதியை ஒருநாள் இரவு புரட் டித்தள்ளினார்கள். வந்த லாபத்தில் பங்குபோட் டுக் கொண்ட பிறகு வல்லப கணபதி மல்லாந்த செய்தி வெளியாயிற்று. லஞ்ச தேவதை விளை யாட ஆரம்பித்தாள். எத்தனையோ கொலைகளும் கொள்ளைகளும் பணத்தின் முன் பல்லையிளித்து விடுவது நாடறிந்த உண்மைதானே ! விபுலாநக் தன் தான் விநாயககரைப் புரட்டினான் என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு! பணம் அங்குமிங்கும் சிதறியோடி சிறைவாசங் கிடைத்தது விபுலனு க்கு ! ஓராண்டு சிறையிலே கிடந்தான் விபுலன்! அவனது வாலிப வேகம் முன்னமேயே புயற் காற்றாக மாறி மார்க்கண்டேயரைத் தகர்த்திருக் கும். மவ்லிகா குறுக்கே நின்றாள். மிராசுதார் மல்லிகா என்னும் மாளிகையைச் சுற்று நின்ற விபுலனென்னும் அகழ் தூர்க்கப்பட்டதாக எண் ணினார். அந்த மானிக்கக் கோட்டையின் காவ லாளிகள் மடிந்து விட்டதாகக் கருதினார். இதழ் அடுக்குகளை இழந்து மலர் தேனை ஒழுகவிடுகி றது என்று எக்களிப்புக் கொண்டார். தேன டையை வீட்டு வண்டுகள் பறந்து விட்டன என்ற முடிவு அவரது மூளையை முட்டிற்று. ஆகவே ஒர் இரவு மிராசுதாரர் தனது ஆ களை வீட்டு மல்லிகாவைத் தூக்கிவர உத்திரவு பிறப்பித்தார். எழுந்த ஆணையின் பயனாய் ஏழு ஆட்கள் புறப்பட்டனர். மல்லிகா தூக்கப்படும். சமயும் விழித்துக்கொண்டாள் விழித்து என்ன பயன் ? “நான்கு பக்கமும் வேடர் சுற்றிட நடு வில் சிக்கிய மான்-கரையில் இட்டதோர் மீன் இந்த நிலைபெற்றாள் மல்லிகா ! காளி கூளி என்று கதற முடியுமா? கதறிதான் பயனுண்டா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கிழவன்_கனவு.pdf/16&oldid=1696761" இலிருந்து மீள்விக்கப்பட்டது