பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

“ஆமாம்” என்றார் உபகாரி.

“அவர்கள் செல்வம் பெரிய கடலைப் போன்ற தானால் உங்கள் செல்வத்தைச் சிறிய கிணறாகச் சொல்லலாம் அல்லவா?” என்று கேட்டார்.

“தங்கள் திருவுள்ளம் எதுவோ அவ்வாறே சொல்லலாம்” என்றார் அவர்.

“அவர்களுக்கு மேலும் மேலும் செல்வம் சேரட்டும் என்று பாடப் போகிறேன்” என்றார் தமிழ் மூதாட்டியார்.

இப்போது யாரும் பேசவில்லை.

ஔவையார் பாடலைச் சொல்லத் தொடங்கினார். அந்தப் பாட்டின் கருத்து வருமாறு.

பிறரைக் கடல் என்றும் அவரைக் கிணற்று நீர் என்றும் பாடினார் ஔவையார் வெறும் அளவை எண்ணி அவர் அவ்வாறு சொல்லவில்லை. கடல் அளவில் பெரியதுதான் ஆனாலும் அதிலிருந்து ஒரு சொட்டு தண்ணீரையாவது தாகத்துக்குக் குடிக்க முடியுமா? அதற்கு அருகிலேயே தோண்டி ஒரு கிணற்றில் சிறிய ஊற்றிலிருந்து வரும். நீரே? தாகத்தைப் போக்கும். சிறிய ஊற்றாக இருந்தால் என்ன? கையில் அள்ளிக் குடிக்கப் போதாதா வற்றாமல் தண்ணீர் வந்து கொண்டே இருக்குமே!

கடலில் உள்ள நீரை மேகங்கள் உறிஞ்சிவற்றச் செய்து எங்கோ கொண்டு போய் மழையாகப் பொழிகின்றன. அதைப் போல அந்தச் செல்வர்களுடைய