பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா. ஜ. வின் சிலேடைகள் - IO3.

தந்தானை இயற்கையாகக் காதலை அளித்த தலைவன்ை. வெறி உற்று எடுத்தாள் - வெறியாட்டை எடுக்கச் செய் தாள். ஆடு தலைகுறைத்தே அடு என்றனள் ஆட்டின் தலையை வெட்டிப் பலிகொடு என்றாள்: ஆடு என்ற சொல்லில் முதல் எழுத்தாகிய ஆ என்னும் உயிர் எழுத்தைக் குறைத்து அடு என்றாள் என்பது நயம். ஆவது என்னே - இதனால் ஆகும் பயன் யாது?

வரைதல்-மை

கையினில் கெல்லிக் கணியென

அன்பர் கணம்உவக்க மெய்யருள் ஈபவன், காந்த

மலைக்குகன் வெற்பில் இவள் மையலுக் கேற்ற மருந்தறி

யாள்தாய்; வரைதல் இன்றி மையினைச் சிந்துவ தால்என்

பயன் இந்த மாநிலத்தே.

கையினில் நெல்லிக் கனியென அருள் ஈபவன்: பிரத்தி யட்ச தெய்வம் என்றபடி இவள் மையலுக்கு ஏற்ற மருந்து - இந்தத் தலைவியின் காமநோய்க்கு ஏற்ற பரிகாரத்தை. வரைதல் இன்றி மையினைச் சிந்துவதால் என் பயன் - திருமணம் செய்வதின்றி ஆட்டைப் பலி கொடுப்பதனால் உண்டாகும் பயன் யாது? எழுதுவதில் லாமல் வெறும் மையைச் சிந்துவதனால் என்ன பயன் என்று தொனிப்பது ஒரு நயம். வரைதல் - மணம் புரிதல், எழுது தல். மை ஆடு, எழுதும் மை. சிந்துதல் - அழித்தல், வினே தரையில் சிந்துதல். -

தீமேல் இவர் மை - தீமை

நாமேல் நடக்கும் புலவர்தம்

பாடல் நயந்தவர்க்குப்