பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின் சேர்க்கை

தட்டை இலை சமயம் நண்பர் வீட்டில் சென்று விருந்துண்ணு கைே வழக்கமாகப் போடும் இலைக்குப் பதிலாத இந்த முறை தட்டில் உணவைப் பரியூ றினார்கள். இவர் சிரித்துக் கொண்டே 'உங்களுக்கு எப்பொழுதுமே தட்டை இலை' என்று சொன்னபோது உபசரித்த வீட்டினர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர். - .

(தட்டை இலை-தட்டுப்பாடே இல்லை, பணத் தட்டுப் பாட்ே இல்ல்ை; உண்ணுவதற்கு இலைக்குப் பதிலாக தட்டை உபயோகித்தல்.) -

á f (JCŞ., Cliș. } 3

ஒரு சமயம் பாரதியார் விழாவில் ஒரு படி மேலே " என்ற் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றிவிட்டுத் திரும்பி நடந்து வருகையில் சில படிகளில் இறங்க வேண்டியிருந்தது. இவர் படிகளைக் கவனிக்கவில்ல்ையோ என்று ஐயுற்ற ஒரு சிறுவன், படி, படி' என்று இவரிடம் குறிப்பிட்ட்ான். இவர் சிரித்துக் கொண்டே, 'எவ்வளவு நல்ல அறிவுரை | ந | ன். எப்பொழுதுமே மாணவனாக இருக்க ஆசைப்படுகிறேன்." அதைத்தான் நீயும் வலியுறுத்துகிறாயோ?" என்று சிரித்துக் கொண்டே ந ன் றி க ல ந் த பார்வையோடு படிகளில் இறங்கினார். -

தங்க இடம்

இவர் எப்பொழுதுமே தாத்துக்குடிக்குச் சென்றால் திரு. கு. நா. சிவராமகிருஷ்ணன் வீட்டில் தங்குவது வழக்கம்.

அப்படி தங்கும் போது ஒரு நாள் திரு.சிவராமகிருஷ்ணன்,

எவ்வளவே வசதி உள்ளவர்கள் தங்களை அங்கு, தங்க அழைத்தாலும், நீங்கள் எப்போதும் எங்கள் வீ ட்டில் தங்குவது நாங்கள் செய்த பாக்கியம்' என்று. சொன்னர்ள். அதற்கு இவர், 'இது தங்க இடமல்லவா?’ என்று

.புன்னகையுடன் கூறினார்.

(தங்க இடம்-தங்கு உயர்ந்த இடம்.)