பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தயார்

துரத்துக்குடியில் அன்பர் சிவராம கிருஷ்ணன் ஒரு முறை இவரிடம், "எல்லோரும் தங்களை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிக்கத் தயாராக உள்ளனர். ஆனால் தாங்கள் அதையும் மீறி எங்கள் வீட்டில் தங்குவது நாங்கள் செய்த பாக்கியம்' என்றார். அதற்கு இவர், "எல்லோரும். தயாராக உள்ளனர். ஆனால் நீங்களோ தாயாராக இருந்து உபசரிப்பதால் இங்கு வருகிறேன்' என்றார்.

அப்படியே எடுத்துக் கொண்டு செல்கிறாயா ?

அல்லயன்ஸ் மணி தன்னுடைய புதல்வருடன் ஒரு சமயம் இவரைக் காண இவர் வீட்டிற்குச் சென்றிருந்தார். பேசிக் கொண்டு இருக்கையில் காபி கொடுத்தனர். திரு. மணி அதைச் சாப்பிட்டு விட்டு அருகில் டம்ளரை வைத்து விட்டு மீண்டும் அவருடைய குடும்பத்தினரிடம் பேசிக் கொண்டிருந் தார். அப்போது இவர் தன்னுடைய அறையிலிருந்து வெளியில் வந்து குனிந்து அ ந் த டம்ளரை எடுத்தார். அதற்குத் திரு. மணி 'மாமா, நாங்கள் எடுத்துச் செல்கிறோம். நீங்கள் அதை எடுக்க வேண்டாம்' என்று கூறினார். அதற்கு இவர், அப்படியே எடுத்துச் செல்லலாம் என்று பார்க்கிறாயா?' என்று நகைச்சுவையுடன் கேட்ட போது அங்கு இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.

செல்லப்பா - ஒரு சமயம் டாக்டர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் இவர் வீட்டிற்குச் சென்றார். அப்போது திரு. செல்லப்பனைத் கண்டதும். இவர், செல்லப்பா என்றால் வந்து கொண்டே இருக்கிறீர்களே சொன்னதைக் கேட்க மாட்டீர்களோ ?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார். உடனே சிலம்பொலி' செல்லப்பன் அவர்களும் சிரித்து விட்டார்.

வைதிகரா?

ஒரு சமயம் இவரது நெடு நாளைய குடும்ப நண்பர் ஒருவர் இவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது இவர், "உன் மகனுக்கு எப்போது திருமணம்?' என்று கேட்ார். அதற்கு அவர், 'நல்ல இடமாக பார்த்துக் கொண்டிருக் கிறேன். நீங்கள்தான் திருமணத்தை முன்நின்று நடத்தி த் தர வேண்டும்' என்றார். அதற்கு இவர், "நான் என்ன வைதிகரா?' (சாஸ்திரிகள்) என்றவுடன் அருகிலுள்ள அனைவரும் சிரித்து விட்டனர். {