பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ. வின் சிலேடைகள் g?"

புத்தகத்துக்கும் வேசிக்கும்

கட்டுதலால் மேல்துணியைக் காட்டிக் கவர்தலால் ஒட்டுபொருள் சேர்முன் னுரையினால்

-தொட்டபக்கம் மாற்றிப் புரட்டுதலால் வாசித்த லால்வேசி தோற்றிய புத்தகமாச் சொல்.

வேசிக்கு : கட்டுதலால்-அ ைன ப் ப த னா ல், மேல் துணியைக் காட்டிக் கவர்த்லால்-தான் அணிந்த ஆடை யலங்காரத்தைக் காட்டி உள்ளத்தைக் கவர்வதால். ஒட்டு பொருள் சேர் முன் உரையினால்-தனக்கு ஒட்டுகின்ற செல்வத்தைச் சேர்ப்பதற்குரிய முன் பேசும் இங்கிதமான வார்த்தைகளால், தொட்ட பக்கம் மாற்றிப் புரட்டுதலால்" தான் ஒரு முறை தொடர்பு கொண்டவரை மாற்றி விட்டுப் புரட்டுச் செய்வதால். வாசித்தலால்-வாசனை வீசுவதர்ல்.

புத்தகத்துக்கு : கட்டுதலால்-பைண்டு செய்வதால் மேல் துணியைக் காட்டிக் கவர்வதால்-கலிகோ பைண் டென்று காட்டி அதிகப்பனம் வாங்குவதால்.ஒட்டு பொருள் சேர் முன் உரையினால் - ந்ாலினுள்ளே உள்ள பொருளை: இன்னதென்று சொல்லும் முகவுரையினால். தொட்ட பக்கம் மாற்றிப் புரட்டுதலால்-படிக்கும்போது முதலில் எடுத்து பக்கம் முடிந்தவுடன் அந்தப் பக்கத்தை மாற்றிப் புரட்டி. அடுத்த பக்கத்தைப் படிக்கத் தொடங்குவதால். வாசித்து லால்-படிப்பதனால், -

இரும்புக்கும் கரும்புக்கும்

வெட்டி எடுத்தலால் மேல்ஆலை பிற்புகலால் ஒட்டு கரும்பொன் றுறுபெயரால்-சுட்டும்தன். பல்வடிவம்.பெய்து பதியவில்லாகுதலால் 4 கல்லிரும்பு தான்கரும்பா நாட்டு.