பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் 互05

பிள்ளைதலைக் கொருகரண்டி எண்ணெயூற்றி டம்மே

. அந்தப் பிள்ளையார்க்குப் படைத்தவெல்லாம் எடுத்துதவிங் கம்மே.

எப்படி அவள் வியாபாரம்! சாமிப் பேரைச் சொல்வி வைத்த பண்டங்களை யெல்லாம் முதலில் வாங்கிக்கொள் கிறாள். அப்புறந்தான் குறி சொல்ல ஆரம்பிக்கிறாள். ஊரிலுள்ள தெய்வங்களை யெல்லாம் அழைக்கிறாள்; வாழ்த்துகிறாள். இந்த ஆர்பாட்டத்தினால் மதனவல்லியின் ஆசை அதிகமாகிக் கொண்டே வருகிறது. மனோவேகம் பெருகுகிறது. குறத்தி லேசிலே விஷயத்துக்கு வருகிறாளா? 'உன் கருத்திலே ஒரு கவலை இருக்குது; அதைச் சொல்லுகிறே னம்மே. ஆனை ஒண்னு தோணுது அதன் மேலே ஒருத்தன் பவனி போனான். ஆனையைக் கண்டு நீ மருண்டு போய் விட்டாய்' என்று மேலாகச் சொல்கிறாள். "என்னடி மலைக்குறத்தி; குறி சொன்னால் வரிசை யாகச் சொல்ல வேண்டாமோ! யாரோ வந்தானென்று சொன்னாய். பிறகு யானையைக் கண்டு மருண்டா யென் கிறாயே!' என்று கேட்கிறாள் மதனவல்வி.

  • அதுதானே சொல்ல வருகிறேன்? உள்ளதைச் சொல்வி விடுகிறேன். ஒரு யானை வத்ததா? அந்த யானை மேலே வந்த வள்ளலினைக் கண்டு உள்ளத்தில் ஆசை கொண்டாய். கொண்ட, வன்மையினால் நண்ணியதில் வுள்மயக்க மம்மே" என்று சொல்லி விடுகிறாள். 'நீ நயந்த நாயகன். சரபோஜி. நீ அவனைச் சேர்வாய். நீ அனுப்பிய துனது, மாலையுடன் வந்துவிடும்' என்று சுபமான செய்தியைச் சொல்லி முடிக்கிறாள் குறத்தி. மதனவல்லி ஆடையாபர னங்களெல்லாம் வழங்குகிறாள்.

இதனுடன் குறவஞ்சியின் ஒரு பகுதி முடிகிறது. அடுத்த படி குறவன் காட்சி அளிக்கிறான். அவன்தான் அந்தக் குறத்தியின் புருஷ்ன். அவன் தன்னுடைய கையாளாகிய