பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IO6 கி. வா. ஜ. பேசுகிறார்

குளுவனுடன் சேர்ந்துகொண்டு பறவை வேட்டையாட வருகிறான்.

வெறிக்கச் சிலர்களை உறுக்கிக்கொண்டு-நீடு மேல்மீசை தன்னை முறுக்கிக்கொண்டு நெறிக்குள் பறவைமேல் நாட்டமோடு வருகிறான். வரும்போதே தன் சிஷ்யனாகிய குளுவனுக்கு எப்படியெல்லாம் வேட்டையாட வேண்டுமென்று உபதேசம் செய்கிறான். பல பறவைகள் அப்போது வருகின்றன. அதைப் பிடிக்க முயலும்போது அவை ஏமாற்றிவிட்டுப் போய் விடுகின்றன. குளுவன், நீ சும்மா இங்கே குந்தி இரு. தாங்க போய் வர்றோமின்னு எல்லாம் போயிட்டுது. இனிமே நீ பறவை வேட்டை ஆடினது போதும். உன் உசிர் போல இருந்தாளே சிங்கி, அவளைத் தேடு' என்று சொல்லு, கிறான். அதைக் கேட்டவுடன் குறச் சிங்கனுக்குக் குறவஞ்சி யாகிய சிங்கியின் ஞாபகம் வந்துவிடுகிறது. அவளை நினைந்து பிரலாபிக்கிறான். அவளுடைய அழகையும் செயல்களையும் வருணிக்கிறான்.

'இன்றைக்கெல் லாமவ ளழகைப் பார்த்துக்கொண்

டிருக்கலாம் சற்றும் பசியாது-மேலும் என்றும் அவள்வடிவைக் கண்டோர் தமக்குரம்பை

எழிலும் மனசுக்கு ருசியாது’’ என்கிறான். குளுவன், "உன் குறத்தி எப்படி இருப்பாள்?? என்று கேட்கிறாள். சிங்கன் வருணிக்கத் தொடங்குகிறான்: 'கன்னமதி லேயிரண்டு சின்ன வடு வுண்டு' அது எப்படி வந்தது தெரியுமா?

'கள்குடித்த வெறியினால் நான் கடித்த துண்டுபண்டு.” 'அடேடே. நீ சொல்கிற இந்த அடையாளத்தோடே தஞ்சாவூரில் ஒரு குறத்தி இருக்கிறாளே. நான் காட்டு கிறேன் வா' என்று சொல்லி அந்தச் சிஷ்யன் குறவனைக்