பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் Jむア

கூட்டிக்கொண்டுபோய்க் குறவஞ்சிக்குமுன் நிறுத்துகிறான். இரண்டு பேரும் உலகத்தையே மறந்துவிட்டுக் குசலப் பிரச்னம் செய்கிறார்கள். அவள் சம்மானமாகப் பெற்ற ஆபரணங்களைக் கண்டு இன்னவென்றுதெரியாமல் குறவன் மயங்குகிறான்.

"இருதன் மேலும் இலுப்பைப்டி, வருவானேன் சிங்கி" என்று கேட்கிறான். அது, சரபோஜி மன்னர் அருள்முத்து மாலையடா சிங்கா’’ என்கிறாள். அவளுடைய நெற்றியிலே என்னவோ தொங்கு கிது. பூனைக் கண்னைப்போலப் பளபளக்கிறது. அது. "புதுமதி நெற்றியிற் பூனைக்கண் இருப்பானேன் சிங்கி" என்று கேட்கிறான்.

'மதனவல்லி ஈந்த வைடூரியச் சுட்டியடா சிங்கா'

என்கிறாள்.)

இருவரும் சந்தோஷமாக, "நாம் இருவரும் கூடி. நயந்து வாழ்வோம்' என்று சொல்லிச் சரபோஜியை வாழ்த்து கிறார்கள்.

இதோடு நாடகம் முடிகிறது. குறத்தியின் சாமர்த்தியமான பேச்சுக்கள் இந்த நாட கத்தின் சுவை நிரம்பிய பகுதி. நாகரிகம் மிக்க கதாநாயகி யின் காதலுள்ளமும், நாடோடியாகிய குறவனது காத லுள்ளமும் அவரவர் மனப்பாங்குக்கு ஏற்றபடி சித்திரிக்கப் பெற்றிருக்கின்றன.

& இதில் இயல் தமிழ்ச்சுவை இருக்கிறது; இசைப்பாட்டுக் கள் இருக்கின்றன; நாடக ரஸ்மும் மிகுதியாக இருக்கிறது .