பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

参见

1X

அகப்பட்டுக்கொண்டு நல்ல பெயர் வாங்குவது சிரமமான காரியம் அல்லவா? -

கட்டுரையாக இருந்தால், படிப்பவருக்கு ஒரு கருத்து விளங்காவிட்டால் அதை மீட்டும் படித்துப் பார்க்கலாம். வானொலிப் பிரசங்கத்தில் அப்படிமீட்டும் தெரிந்துகொள்ள வகை இல்லை. சொல்லும் விஷயங்கள் பளிச்சுப் பளிச் சென்று விளங்க வேண்டும்; அல்லது பின்னாலே விளங்கக் கூடியதாக இருந்தால் அதுவரையில் கருத்துத் தொடர்பு அறாமல் கேட்பவர்களுடைய உள்ளத்தில் பற்ற வேண்டும். தெளிவுதான் வானொலிப் பேச்சுக்கு மிகவும் அவசிய மானது. அது இல்லாவிட்டால் ரேடியோ வைத்திருக்கிறவர், பிரசங்கியின் காதைத் திருகுவதுபோல முடுக்காணியைத் திருகிவிட்டு வேறு பாட்டோ செய்தியோ கேட்க ஆரம்பிப்ப தைப்பற்றிக் குறைகூற நியாயம் இல்லை. - புஸ்தக உருவத்தில் வரும் கட்டுரைகள் செறிவு மிகுதி யாக உள்ளவை. பத்திரிகைகளில் வருபவை அவற்றிலும் செறிவு குறைந்து விளக்கம் மிகுந்து அமைந்திருக்கின்றன. அவற்றைவிடத் தெளிவாக, செறிவு குறைவாக இருப்பது வானொலிப் பேச்சு. அதைக் காட்டிலும் செறிவு மிகக் குறைந்து, உதாரணங்களும் விளக்கங்களும் மிகுதியாக அமைவது மேடைப் பிரசங்கம். செறிவு அதிகமாக ஆக அதற்கு ஆயுளும் அதிகமாகும். இலக்கியமாகக் கணக்கெடுக் கும்போது செறிவுள்ளவையே முதலில் வருகின்றன.

இலக்கியங்கள் சிறப்புடையன என்றாலும், அவற்றை நேரே படித்து இன்புறுவர் சிலரே. இலக்கியத்தின் அழகை எடுத்துக் காட்டும் விமரிசனங்களைப் படித்து இன்புறு வோரே பலர். செறிவு குறைவாக இருந்தாலும் தெளிவான முறையில், சில கருத்துக்களையே வெளியிட்டாலும் உள்ளத் தில் பதியும்படியாக எழுதினால் அல்லது சொன்னால், அந்த முயற்சி முடிவில் இலக்கிய வளர்ச்சிக்கு ஏதுவாகவே ஆகும்,