பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா

1

“ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி, அதற்கும் இளைச்சவன் பள்ளிக்கூடத்து வாத்தி யார்' என்ற பழமொழி இக்காலத்தில் எங்கும் வழங்கு விறது. இந்தப் பழமொழி ஏதோ நடுவில் வந்த புது' என்றுதான் தெரிகிறது. ஏனென்றால் நம்மு-ை4 தேசத்தில் கோவில் பூசகர்களையும் உபாத்தியாயர்களையும் இழிவாக நினைக்கும் வழக்கம் பழங்காலத்தில் இல்லை. கோவில் ஒவ்வோர் ஊருக்கும் அவசியம் என்று பழந்தமிழர்கள் நினைத்தார்கள்.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது ஒரு பழமொழி.

"திருக்கோயில் இல்லாத திருவில் ஊர்' என்று அப்பர் சுவாமிகள் சொல்கிறார். கோவில் இல்லாத ஊரில் திரு மகளின் விலாசம் இராதாம். அதை மூதேவி பிடித்த ஊர் என்றே சொல்ல வேண்டுமாம். .

இந்தமாதிரியே வாத்தியார் இல்லாத ஊரும் பிரயோ சனம் அற்றது என்று சொல்லி யிருக்கிறார்கள்": .

கணக்காயர் இல்லாத ஊரும்...... நன்மை பயத்தல் இல் 2ణా :Fit :

என்று ஒரு பழைய நூல் சொல்கிறது. உபாத்தியாயருக்கு அந்தக் காலத்தில் கணக்காயர் என்ற பெயர் வழங்கி வந்தது. கனக்கு என்பது நூலுக்குப் பெயர். அதைக் கற்பிக்கிற தலைவர் கணக்காயர். நக்கீரர் என்ற புகழ் பெற்ற சங்கப் புலவருடைய தகப்பனார் மதுரையில் வாழ்ந்த ஒரு சிறந்த உபாத்தியாயர். இப்போதும் மரியாதையாக ஒரு கிர்ர்த்ே