பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா 109.

தில் உள்ள உபாத்தியாயரைப் பேர் சொல்லாமல் வாத்தி யார் ஐயா" என்று சொல்வதில்லையா? அதுபோல அவரை எல்லோரும் கணக்காயர்’ என்றே அழைத்து வந்தார்கள். அதனால் நாளடைவில் அவர் பெயர் மறந்து போகவே " மதுரைக் கணக்காயனார்’ என்ற பெயர் நிலைத்துவிட்டது. பழைய புஸ்தகங்களில் நக்கீரர் பேர் வரும் இடங்களில் எல்லாம் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரன்ார்’ என்று எழுதி யிருப்பதைக் காணலாம்.

இந்தக் காலத்தில் வாத்தியார் ஐயா இளப்பமானவஸ்து ஆகிவிட்டார். போதாக் குறைக்கு அவரைப்பற்றி எத்த னையோ கதைகள் கட்டி அவற்றின் மூலமாகவும் அவரைச் சேர்ந்தவர்களுக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். 'டானாக் கூட்டம்' என்றும், அண்ணாவிகளென்றும் சமுதாயத்தின் ஒதுக்குப்புற வாசிகளாக அவர்கள் இருக்கிறார்கள். சமூகத் தில் அவர்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்களே ஒருவருக்கு ஒருவர் மதிப்பு வழங்குவதில்லை. வேறு ஒரு வேலையும் கிடைக்காவிட்டால் தான் படித்தவர்கள் வாத்தியார் வேலைக்கு வருகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் உத்ஸாகம் இல்லாமல் இருக்கிறார் கள். அதற்குக் காரணம் அவர்களுடைய சம்பளந்தான். மற்ற உத்தியோகஸ்தர்களெல்லாம் தொப்பியும் நிஜாரும் அணிந்துகொண்டு டாக் டீக்கென்று உலவும் உலகத்தில் மூலைக்கச்சத்தையும் அங்கவஸ்திரத்தையும் ஈசல் சிறகை விரித்துப் பறப்பதுபோல் பறக்கவிட்டுக்கொண்டு செல்லும் வாத்தியார் ஐயா நிலை பரிதாபகரமானதுதான்.

பழைய காலத்தில் வாத்தியார் ஐயா. இப்படி இருக்க வில்லை. அவர் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர் கூட்டத் துக்குத் தலைவர்; எதிர்கால சந்ததிகளுக்கு அவரே கடவுள். 'எழுத்ததிவித்தவன் இறைவன் ஆ கு ம்' என்று அதிவீரராம பாண்டிய மன்னர் சொல்கிறார். இறைவன் போன்றவன் என்று சொல்லாமல் இறைவனே ஆவான்