பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

It 16 கி. வா. ஜ. பேசுகிறார்.

ஏற்ற விஷயங்களைக் கற்பிக்க வேண்டும். எழுவாய், பயனிலை, செயப்படு .ெ பா ரு ள் இன்ன வென்று. தெரியாத மாணாக்கனுக்குத் தொல்காப்பியச் சூத்திரங். களைச் சொல்லித் தந்தால் அவனுக்குத் தலைவலி, ஆண்டாவதுதான் லாபம். வாத்தியார் ஐயா தம்முடைய சத்தியை வீணாகச் செலவிடுகிறார். என்னடா இது, பேரிழவாக இருக்கிறதே!” என்று மாணாக்கன் தொல்காப் , குத்திரத்தையும் தொல்காப்பியரையும் சேர்த்துத் திட்ட ஆரம்பிப்பான். ஆசிரியருக்குத் தொல்காப்பியரிடத். தில் பக்தி இருக்கலாம்: தொல்காப்பியத்தில் நல்ல பயிற்சி இருக்கலாம். சபாத்திர மல்லாத இடத்தில் பிச்சை இட்ட’ வாத்தியார் குற்றத்துக்காகத் தொல்காப்பியர் நிந்தனைக்கு. ஆளாகிறார்.

நானாக்கனுடைய முயற்சிக்கு ஏற்ற அளவில் போதிக்க. வேண்டும். சிறு முயற்சி செய்பவனுக்குப் பெரிய பொருளைப் போதித்தல் அந்தப் பொருளினிடத்தில் மாணாக்கனுக்குக் கெளரவ புத்தி ஏற்படாது. இலவசமாக இறைபடும் பண்ட. மென்று எண்ணிக்கொள்வான். வாத்தியாருடைய பெருங். கருணையைப் பாராட்டக் கூடாதோ?’ என்று நீங்கள்கேட்க லாம். அதெல்லாம் அறிவு நிரம்பின பெரியவர்கள் கடமை. பல்லவா? மாணாக்கன் அவ்வளவு உயர்ந்த பண்புடைய வனாக இருந்தால் ஆசிரியனிடம் எதற்காக வருகிறான்? 捻

எந்தத் தொழிலிலும் உலக இயல்பு தெரிந்து நடக்க வேண்டும். பொருளைச் சிக்கனமாகச் செலவு பண்ண வேண்டும் என்று சொல்கிறோம். அறிவுச் செல்வத்தையும். இக்கனமாகத்தானே வழங்க வேண்டும்? முயற்சி செய்யச் செய்ய வஞ்சகமின்றி வாரி வழங்கினால் வாங்கிக்கொள்பவ. னுக்கும் மகிழ்ச்சி, கொடுப்பவனுக்கும் திருப்தி உண்டாகும். ஆகவே பருவம், முயற்சி என்பவற்றின் அளவறிந்து வாத்தி யார் ஐயா தம் தொழிலை நடத்தி வரவேண்டும். இலக்கண