பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X

அப்படியே, செறிவுள்ள புஸ்தகங்களை மக்கள் ஆவலோடு தேர்ந்து படிப்பதற்கும் இலக்கியச் சுவையை உண்டாக்குவ: தற்கும் செறிவிலே படிப்படியாகக் குறைந்து, தெளிவும் விளக்கமும் படிப்படியாக மிகுந்து விளங்கும் பத்திரிகைக் கட்டுரைகளும், ரேடியோப் பேச்சுக்களும், மேடைப் பிரசங் கங்களும் மிகவும் உபயோகமானவை. இலக்கிய ஞானத்தை அடைவதற்கு இவை சரியை, கிரியை, யோகம் என்பன போன்ற சோபனங்கள் என்றே சொல்லலாம்.

3

ரேடியோப் பிரசங்கத்தின் வெற்றியில் ஒருபகுதி விஷயத் தைப் பொறுத்ததானாலும், அதை விளக்கும் தோரணையி லும், சொல்லும் தொனிபேதங்களிலுமே அவ்வெற்றியின் பெரும்பகுதி அடங்கி இருக்கிறது. ஏதோ எழுதி வைத்த தைப் படிக்கிறாரென்ற உணர்ச்சி கேட்பவர்களுக்கு ஏற். படாதபடி பேச்சு அமைய வேண்டும். இயற்கையாகவே வானொலிக்கென்று எடுத்த குரல்கள் உண்டு. எல்லோ ருடைய குரல்களும் வானொலியில் பிரசங்கச் சுவையை விளைவிப்பதில்லை. மேடைப் பிரசங்கத்தின் சுவைக்கு ஒரு காரணமாக இருக்கின்றது.

பேச்சைப் பேச்சென்று நம்பச் செய்பவை தொனிபேதங் களே. நமக்கு முன்னாலே பலர் இருக்கிறார்கள்,அவர்களுக்கு. முன் நாம் நிற்கிறோம் என்ற நினைவு நமக்கு முதலில் இருக்க வேண்டும். அதைக் கேட்பவர்களுக்கும் நினைவூட்ட வேண்டும். பிரசங்கத்தின் போக்கிலே அந்த நினைவு எழ. வேண்டும். அவர்களை முன்னிலைப் படுத்திச் சில சமயங் களில் விஷயத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். அவர் களிடம் கேள்விகள் கேட்க வேண்டும். நம்முடைய பிரசங்க யாத்திரையில் நம்மோடு அவர்களையும் அழைத்துச் சென்று 'இதைப் பாருங்கள்; அதைக் கவனியுங்கள் என்று சொல்ல வேண்டும். .