பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கி. வா. ஜ. பேசுகிறார்

என்று அறுதியிடும் நினைவு யாருக்கும் வரக்கூடாது. எந்த விஷயத்தைக் கேட்டாலும் இவர் சொல்கிறாரே. இவருக்கு இன்னது தெரியும், இன்னது தெரியாது என்ற வரை யறையோ இல்லைபோலும் என்று ஜனங்கள் வியக்கும்படி ஆசிரியர் இருந்தால் அவரை மலையென்றும் சோல்லலாம்; கற்பகமென்றும் சொல்லலாம். . -

மலைக்கு ஆசலம் என்பது வடமொழியில் வழங்கும் பெயர்களில் ஒன்று அசையாதது” என்பது அதன் பொருள். வாத்தியார் சுகதுக்கங்களுக்கும், ஐயந்திரிபுகளுக் கும் எதிர் நின்று அசையாமல் இருக்க வேண்டும். கல்வி யென்பது உலகத்தில் பணம் படைக்கவும் புகழ் படைக்கவும் மாத்திரம் ஏற்பட்டதன்று. உயிருக்கு உறுதி பயக்கும் முயற்சியில் தலைப்படவும், இறைவனை உணரவும், இறுதி யில்லாத இன்ப வீட்டை அடையவும் அது சாதனமாக உதவு வது. ஆகவே கல்வி யென்பது ஒரு வகையான சாதனை. மனத்தைப் பண்படுத்தும் சாதனையென்றே சொல்ல வேண்டும். "வைத்ததொரு கல்வி 'மனப் பழக்கம்' என்று ஒளவைப்பாட்டி சொல்கிறாள். அந்தப் பழக்கம் முறுக முறுக மனிதனுக்குத் தெளிவும் திருப்தியும் உண்டாகும். நெஞ்சார நல்ல நெறியில் நடக்கும் திறமை ஏற்படும். நெஞ்சத்து, நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால், கல்வி அழகே அழகு" என்று நாலடியாரில் வருகிறது. கல்வியினால் உள்ளத்தைப் பண்படுத்தியவன் பிறருடைய மதிப்பினால் தான் நல்லவனென்ற பெயரை அடைய வேண்டும் என்பது இல்லை. அவனே தன்னை நடுநிலையில் நின்று சோதித்துக் கொள்வான். அவனுடைய பயிற்சி மிகுதியாக ஆக, நாம் நல்ல மனிதர்களோடு சேரத் தகுதியுடையோம்' என் தம்பிக்கை உதயமாகும். -

இத்தகைய உள்ளப் பயிற்சியையே கல்வி முறையாக முன்னோர்கள் போற்றினார்கள். இந்த மாணாக்கர்களுக்கு