பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா I 19

கற்பித்துத் தரும் ஆசிரியர் நடுங்கும் உள்ளத்தோடு இருக்க லாமா? அசையாத உறுதியும் நிலையான இயல்பும் அவர் உள்ளத்தில் நிலவ வேண்டும் அல்லவா? ஆதலால் ஆசிரியர் அசலத்தைப்போலத் துளக்கலாகா நிலை"யை உடையவ ராவது அவசியம். .

ஆசிரியர் பிறருடைய கவனத்தை ஈர்க்கும் தோற்றம் படைத்தவராக இருக்க வேண்டும். தோற்றம் என்பது உடலின் தோற்றமன்று. அவருடைய இயல்பு, வார்த்தைகள் எல்லாம் சேர்ந்த ஒர் உருவம் (Personality) அகத்திய முனிவர் உருவத்தால் சிறியவர். ஆனாலும் அவருடைய தோற்றம் பெரிது. எவ்வளவு மக்கள் கூடியிருந்தாலும் அவரைத் தனியே கண்டுபிடித்து விடலாம்; உருவச் சிறுமை யாலன்று. அந்தப் பெரிய கூட்டத்தில் அவரைச் சூழ மக்கள் பணிவோடு நிற்பார்கள். எல்லோருடைய கண்ணும் கருத் தும் அவரிடமே செல்லும்.

ஆசிரியரிடம் இத்தகைய தோற்றம் இருக்க வேண்டும். வேகம்ாகக் காற்று அடிக்கிறது. மேகங்கள் கலைந்து ஒடு கின்றன. உன்னதமான மலை ஒன்று இருந்தால் மேகங்கள் தடைப்பட்டு நின்று விடுகின்றன. மலையின் தோற்றம் எல்லாப் பொருள்களையும் தன்னிடத்தில் நிற்கும்படி செய் கின்றது. வெகு வேகமாக ஒரு காரியத்தைச் செய்ய ஒரு மனிதன் ஒடுகிறான். இடையே வாத்தியாரையாவைச் சந்திக்க நேர்ந்தால் அவன் வேகம் குறைந்து சட்டென்று நின்று ஒரு கும்பிடு போடுகிறான். அவர் பேச ஆரம்பித்தால் பொறுமையோடு கேட்கிறான். சிலசமயங்களில் அவருடைய நல் லுரைகளில் ஈடுபட்டுப் போய்த் தன் வேலையையே மறந்து போனாலும் போய்விடுவான்.இப்படி ஒரு தோற்றம் ஆசிரியருக்கு இருக்க வேண்டுமென்றால் அவரை ஊராரெல் லாம் பாராட்டித் தொழுவதில் ஆச்சரியம் என்ன?

பஞ்சம் வந்துவிட்டது; அப்போது மற்ற இடங்களிலெல்