பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா #31

யில் நின்று நூற்பொருளில் தம் கருத்தை நுழைக்காமல்

இருப்பவரே சிறந்த ஆசிரியர்.

ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும் மெய்ந்நடு நிலையும் மிகும் திறை கோற்கே

என்று இலக்கணம் கூறுகிறது.

சமூகமாகிய விருட்சத்தில் வாத்தியார் ஐயா மலரைப் போல விளங்குகிறார். மலர் அழகிய பொருள்: மங்கலமான பொருள். வாத்தியார் ஐயா இருந்து விட்டால் சமுதாயம் சோபையை அடைகிறது. சமுதாயத்துக்கு அவசியமான பொருள் அவர். ஊரில் எந்தப் பொதுக் காரியமானாலும் வாத்தியார் ஐயாவுக்கு முதல் அழைப்பு. யாராக இருந்தா லும் அவரை வரவேற்று உபசரிப்பார்கள். அவர் யாவருக் கும் இனியவர்; இதமான வார்த்தைகளைச் சொல்பவர். மென்மையான இயல்புடையவர். 'மலர் மங்கலமானது; நல்ல காரியங்களுக்கு இன்றியமையாதது; யாவரும் மகிழ்ந்து கொள்வதற்குரியது; மெல்லியது என்று புகழ்கிறோம். அந்தப் புகழை அப்படியே வாத்தியார் ஐயாவுக்கும் சொல் லும்படி அவர் இருக்க வேண்டுமாம்.

மலருக்குப் போது என்று ஒரு பெயர் உண்டு. தக்க

பொழுதில் தவறாமல் மலர்வதனால் அதற்கு அப்பெயர் வந்ததாம். இயற்கையிலே அமைந்த கடிகாரம் அது.ஆசிரியர் அதைப் போலக் காலந்தவறாமல் மாணாக்கர்களுக்கு முகமலர்ச்சியோடு பாடம் சொல்லித் தர வேண்டும். காலக் கணக்கைக் கவனிப்பதில்லை என்ற குறைபாடு நம்மவர் களுக்கு இருப்பது உலகம் அறிந்தது. வாத்தியார் ஐயா அந்த அபவாதத்துக்கு உட்படக் கூடாது. பொழுதறிந்து கடமை யைப் புரியும் இயல்பு அவரிடம் இருக்க வேண்டும்.

மங்கலம் ஆகி இன்றியமை யாது

யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்

பொழுதின் முகமலர் வுடையது பூவே