பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா 127"

தோடு இருக்கும், முதலில் குடத்திலே போடும்போது எந்த முறையில் காய்கள் விழுகின்றனவோ அதே வரிசையில் ஒன் றன்பின் ஒன்றாக மீட்டும் எடுக்கும்போது வருவது இல்லை. ஒரேடியாகச் சேர்ந்து விழுந்துவிடும். போடும்போது விழுந்த முறைப்படியே எடுக்கும்போதும் வரவேண்டுமென்றால் கழற்குடத்தில் நடக்காது. செங்கல்லாக இருந்தால் ஒன்றன் மேல் ஒன்றை அடுக்கி மீட்டும் அப்படியே எடுக்கலாம். கழற்சிக்காய் ஒன்றனோடு ஒன்று ஒட்டாது; போட்ட இடத் தில் இராது. ஆகவே எடுக்கும்போது முறைமாறி வருவதி லும் பல சேர்ந்து விழுவதிலும் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. கழற்சிக் காய் பெய்த குடத்தில் காணப்படும் இந்த முறை மாற்றம் போவி வாத்தியார் ஐயாவிடம் இருக்கும். அவர் வாசித்த காலத்தில் இன்னதன்பின் இது என்ற முறைப்படியே ஒழுங்காகக் கற்றுக்கொண்டிருப்பார். சொல் லிக் கொடுக்கும் போதோ, அந்த முறையெல்லாம் மறந்து போய்விடும். தெரிந்தவற்றைத்தான் சொல்லிக் கொடுப் பார். ஆனால் முறைமாறிப் போய்விடும். ஒவ்வொன்றாகச் சொல்லுவதை விட்டு ஒரேடியாகப் பல விஷயங்களைத் திணித்து விடுவார். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்று மூன்று முறையாகச் சொல்லிக் கொடுக்காமல் வகுத் தவிலிருந்து ஆரம்பித்தால் பையனுக்கு ஒன்றுமே வராது. இலக்கிய இலக்கணத்திலும் இப்படி முறை உண்டு. அந்த முறை பிறழ்ந்தால் மாணாக்கனுக்கு வீண் சந்தேகங்கள் கிளம்பும். முறைமாறிச் சொல்லிக் கொடுக்கும் வாத்தியா ரைக் கழற்குடத்தோடு ஒப்பிட்டுப் பேசுவதில் பிழை என்ன?

பெய்தமுறை யன்றிப் பிறழ உடன்தரும் செய்தி கழற்பெய் குடத்தின் சீரே. Tபெய்தல்-இடுதல். பிறழ-மாறுபடும்படி, உடன்தரும் - ஒருங்கே கொடுக்கும். செய்தி-இயல்பு.1