பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XI

அந்த மாலை இன்னது என்று உங்களுக்குத் தெரிந் திருக்கலாம்', 'பரம ரசிகர்களாகிய மது கரங்கள் நம்மிடத் தில் உள்ள கருணையின்ால் நமக்கு இடம்கொடுத்துப் போய் விட்டன, ஒளவையாரைத்தான் உங்களுக்குத் தெரியுமே?” 'எதை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள், நீங்களே சொல்லுங்கள். அந்தக் காலம்வேறுதான்; இந்தக் காலம் வேறுதான்', 'இனி, சரித்திரத்திற்கு வருவோம், எனக்கு ஒன்று தோன்றுகிறது. உங்கள் அபிப்பிராயத்துக்குப் பொருத்தமாயிருந்தால் வைத்துக் கொள்ளுங்கள். இல்லா விட்டால்...தான் சொல்லுவானேன்? உங்கள் இஷ்டம்.” 'அதிலே உள்ள கவிதைக்கு உதாரணம் வேண்டுமா? சிறிது கேளுங்கள்;, ஹாஸ்ய ரளத்தைக் கொஞ்சம் ருசி பாருங்கள்’ இந்த மாதிரியான் வாக்கியங்களைப் பின்வரும் கட்டுரை களில் அன்பர்கள் கண்டால் வானொலியின் முன்னாலே நின்று பேசுகிறேன் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளும் படி வேண்டுகிறேன். .

தொனி பேதங்கள் இருந்தால்தான் ரேடியோப் பிரசங் கம் கேட்பதற்கு நன்றாக இருக்கும். கேள்விக் குறிகளும் ஆச்சரியக் குறிகளும் காகிதத்தில் இருக்கும் பொழுதைவிடப் பேச்சிலேதான் அதிகமாகத் பரிமளிக்கின்றன. பாவத்தோடு, பேசுவதற்கு அவை கருவியாக உதவுகின்றன.

"மனம் சும்மா இராமல், அது என்ன மணம் என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்கியது' என்று ஒரு வாக்கிய மாக எழுதி விடலாம். பேசும்போது இடையே ஒரு கேள்வி. யைப் போட்டுக்கொண்டு, மேலே மனம் சும்மா இருக்குமா?" அது என்னமணம் என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்கியது: என்று சொன்னால், கேட்பவர்கள் 'இது உயிருள்ள மனிதன் தொனி பேதத்துடன் பேசும் பேச்சு என்று நினைப்பார்கள்.

ஒரு புலவருடைய பாடல் வெறும் சொல்லடுக்கு என்று சொல்லுகிறோம். அதற்கு வேண்டிய நிருபணமெல்லாம்