பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

上覆品0 கி. வா. ஜ. பேசுகிறார்

படர்ந்த இடம் ஒன்றானால், தேங்காய் விழும் இடம் வேறாக இருக்கும். ஒருவன் தன் வீட்டுப் புறக்கடையில் மரத்தை வைத்துத் தண்ணிரூற்றிக் காப்பாற்றினால் முடத் தெங்கு அடுத்த வீட்டுப் புறக்கடையில் தலையை நீட்டும். அதிலிருந்து விழும் மட்டையோ தேங்காயோ அடுத்த வீட்டுச் சொத்தாகப் போய்விடும்.

எவ்வளவோ பயபக்தியோடு வந்து வழிபடும் மாணாக்க னைப் புறக்கணித்து விட்டு வருவார் போவோருக் கெல்லாம் உபதேசம் செய்யும் வாத்தியார் ஐயாவை முடத்தெங்

கென்று சொல்கிறார்கள்.

பல்வகை உதவி வழிபடு பண்பின் அல்லோர்க்கு அளிக்கும் அதுமுடத் தெங்கே. வழிபடும் மாணாக்கன் அறிவுப் பசியோடு ஏமாந்து நிற்கச் செய்வது பாவம் அல்லவா?

போலி வாத்தியாரின் லட்சணங்களைத் தொகுத்து இலக்கண நூல் சொல்வதைப் பாருங்கள்:

மொழிகுணங் இன்மையும் இழிகுண இயல்பும் அழுக்காறு அவாவஞ்சம் அச்சம் ஆடலும் கழற்குடம் டற்பனை பருத்திக் குண்டிகை முடத்தெங்கு ஒப்பேன முரண்கொள் சிந்தையும் உடையோர் இலர்ஆ சிரியர்ஆ குதலே |அச்சம் ஆடல்-பயம் உண்டாகப் பேசுதல்)

'இந்தக் குணங்கள் கெட்ட வாத்தியார்களுக்கு உரியன" என்று சொல்லவில்லை; இந்த லட்சணங்களை உடையவர் கள், ஆசிரியர் ஆகலாம் என்ற சிந்தனைக்கே உட்படாதவர் களாம். ஆசிரியர் ஆகுதல் அவர்பால் இல்லையென்று

சாதுரியமாகச் சொல்கிறது சூத்திரம். . . .

எல்லாவற்றையும் பார்க்கும்போது வாத்தியார் ஐயா