பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j 32 கி. வா. ஜ. பேசுகிறார்

நல்ல ஆசனத்தில் அமர்கிறார். கடவுளுக்கு முதலில் ஆசனத்தைச் சமர்ப்பிக்கிறோம் அல்லவா? பிறகு அவர் தெய்வத்தைத் தியானித்துக் கொள்கிறார். தமக்கும் பிறருக் கும் நல்ல பயனை உண்டாக்கும் ஒரு கைங்கரியத்தைத் தொடங்குபவர் இரமமாகத் தெய்வ வணக்கத்தோடு ஆரம்பிப்பதுதானே தல்லது?

பாடம் சொல்லும்போது எந்த விஷயத்தைப் பற்றிச் சொல்லப் போகிறோம், எப்படிச் சொல்ல வேண்டும் என்று. வாத்தியார் ஐயா திட்டம் பண்ணிக் கொள்வார், சொல். இந்த விஷயம், முறை இந்த இரண்டையும் இக்காலத்தில் கூட வர்த்தியார் மேலதிகாரிக்குக் காட்டுவதற்காக எழுதி: வைத்துக் கொள்கிறார்கள். உரைக்க வேண்டிய பொருளை உள்ளத்தில் அமைத்துக் கொண்டு பாடம் சொல்ல ஆரம். இது அவருக்கு அதில் சந்தேகம் இராது; அதனால் விடுவிடுவென்று சொல்லிக்கொண்டு போகலாம். அப்படிச் செய்தால் மானாக்கர்களுக்குப் புரிவது கஷ்டம். ஆகையால் விரையாமல் பாடம் சொல்வார். மாணாக்கர்களெல்லாம். ஒரே மாதிரியான அறிவு படைத்தவர்களாக இருக்க மாட் டார்கள். சிலர் தீவிரமான அறிவுடையவர்களாக இருக்கக் கூடும்; சிலர் சற்று மந்தமாக இருக்கலாம். பாடம் சொன்ன வுடன் இரதிக்கவில்லையே என்று வாத்தியார் ஐயா கோபித்துக்கொள்ள மாட்டார். பாடம் சொல்வதிலே, அவருக்கு ஒர் இன்பம் உண்டு. ஆகையால் விருப்பத்தோடு சோல்வார். மலரைப் போன்ற பண்புடைய அவர் பாடம் கேட்கிறவன் எப்படி விஷயத்தை ஏற்றுக்கொள்கிறான். என்பதை ஆசிரியர் நன்றாகக் கவனிப்பார். அவன் தகுதிக்கு, ஏற்றபடி, அவனுக்கு எப்படிச் சொன்னால் விளங்கும். என்பதை யோசித்துப் பாடஞ் சொல்வார். அவன் சக்திக்கு, எவ்வளவு சொல்லித் தந்தால் போதுமோ அந்த அளவையும் தெரிந்து அவன் உள்ளம் கொள்ளும்படி சொல்வார். சொல்