பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறும் சரித்திரமும் 141

- இருங்கோவேள் என்னும் சிற்றரசன் ஒருவனைப்பற்றிச் சொல்லும் கபிலர் அவனைப் புலிகடி மாஅல்' என்று விளிக் கின்றார். ஹொய்ஸ்ளரென்னும் வமிசத்தைச் சேர்த்தவன் அவன். தபங்க ரென்னும் முனிவர் ஒரு காட்டில் தவம் செய்கையில் ஒரு புலி அவர்மேற் பாய்தற்கு நெருங்க, அது கண்ட அம்முனிவர் அங்கு வேட்டையாடி வந்த சளனென். லும் யாதவ அரசனை நோக்கி ஹொய்ஸ்ள’ என்று கூறினா ராம். அவன் அப்புலியைத் தன் அம்பால் எய்து கடிந்தமை யால் ஹொய்ஸ்ளனென்றும், அவன் வழி வந்தோர் ஹொய் ஸளரென்றும் வழங்கப்பட்டனர். -

பாடப்பட்டோர்

புறநானூற்றில் பாடப்பட்டவர்களிற் பெரும்பாலோர் சேர சோழ பாண்டியர்களே; பாரி, காரி, ஆய் முதலிய சிற்றரசர்களும், சில படைத் தலைவர்களும், சில வேளாளர் களும், அந்தணர் சிலரும் புலவராற் புகழப் பெறுகின்றனர். இரண்டாவது பாட்டு முதல் பதினாறாம் பாட்டு வரையில் சேரர், பாண்டியர், சோழர் என்ற முறையில் பாடல்கள்

அமைந்திருக்கின்றன.

அதன்பின் இம்மூவரும் ஒரு முறையின்றிப் பாடப் பெறுகின்றனர்; சோழர்களும் பாண்டியர்களுமே பல பாடல் களாற் புகழப்படுகின்றனர். முதல் 85 பாடல்கள் முடி மன்னர்களாகிய இம்மூவரின் புகழைச் சொல்வன. அதன் பின் அதிகமான், பாரி, காரி, ஆய், பேகன், ஒரி முதலிய வள்ளல்களும், நாஞ்சில் வள்ளுவன், பிட்டங்கொற்றன் முதலிய வீரர்களும், பல வேளாளர்களும் புகழப் பெறு கின்றனர். 182 முதல் 185 பாடல்கள் வரை சில மன்னர்கள் தாமே இயற்றிய பாடல் உள்ளன. 186 முதல் 195 வரையில் பொது வகையில் அமைந்த தனிப் பாடல்களும். 196 முதல் 211 வரையில் பரிசில் துறைபற்றிய பாடல்களும், 212 முதல் 223 வரையில் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த செயலைப்