பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

工丑44 கி. வா. ஜ. பேசுகிறார்

கெடுதலின்றி வீரம் பொருந்திய சோழர்களுக்குரிய :உறையூரில் அறங்கூரவையத்தில் தர்மம் எப்போதும் நின்று நிலவுகிறது. அப்படி யிருக்க நீ இன்று புதிதாக முறைமை செய்கிறாய் என்று சொல்லலாமா? அதுவும் உனக்குரிய சிறப்பன்று.

கன்னார் கண்ணிக் கலிமான் வளவ யாங்கனம் மொழிகோ யானே!

கிள்ளி வளவனே! உன் புகழை எவ்வாறு நான் வரை யறுத்துத் தனியே எடுத்துச் சொல்ல முடியும்?

இப்படிக் கேட்கிறார் அந்த அறிவுடை நங்கையாகிய நப்பசலையார். ஈகையும், வீரமும், நீதி வழங்கும் அறிவும் மன்னனுக்குரிய சிறப்புக்களுள் தலைமையானவை என்ற செய்தியை அப்பெண் புலவர் இதன் வாயிலாகத் தெரிவித் திருக்கிறார். - -

அரசனுடைய இலக்கணங்களுள் அவனுடைய உயர் குணங்கள் முக்கியமானவையே. அவற்றோடு நாடு, நகர், ஆறு, மலை முதலிய இயற்கை உறுப்புகளும், தார், கொடி, முரசு முதலியவையும், மந்திரி, மறவர் முதலிய சுற்றத் தினரும் சேர்ந்தால்தான் அரசு உண்டாகும். அரசன் உயிரானால் நாடு உடல் ; ஏனையவை அவ்வுடவின் உறுப்புக்கள்.

ந ா டு

-தமிழருடைய பூகோள அறிவு புறநானூற்றால் ஓரளவு தெரிகிறது. அந்தர் மத் தி ய பாதலமென்ற புராணப் பகுப்பை, முப்புன ரடுக்கிய முறை' என்று குறிப்பிடுவர் பண்டைத் தமிழர். இந்த மூன்று உலகங்களில் இவ்வுலகம், 'முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப், பரந்துவிட்ட வியன் ஞாலம்' என்பதை உணர்வர். பாரத நாட்டின் எல்லையும் அவர்களுக்குத் தெரியும். -