பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星46 கி. வா. ஜ. பேசுகிறார்

பெளவம்' என்று பழம் பெருமையை அடைந்து விட்டது. இந்த இரண்டு கடல்களையும் இப்படி வேறுபடுத்திச் சொல் வதற்கு ஆதாரமான நிகழ்ச்சியொன்று மிகப் பழங்காலத்தில் நிகழ்ந்திருக்க கூடும். இமய மலையே புதியதாக உண்டானது என்று,முன்னைப் பழம்பொருட்கும்முன்னைப்பழம்பொருள் ஆராயும் நிலவியல் நூல் வல்லார் (Geologists) சொல்கி றார்கள். அது வியப்பாகாமல் அறிவொடு பொருந்திய செய் தியானால், இந்தத் தொடுகடற் கதைக்கும் தக்க காரணம் இருக்குமென்று கொள்வதும் பொருத்தமேயாகும்.

பாரத தேசத்துக்குள்ளே தமிழ் நாடு இருக்கிறது; இந்த நாட்டைத் தமிழகம் என்ற அருமைப் பெயரால் வழங்கு

வார்கள்,

வையக வரைப்பிற் றமிழகம், தண்டமிழ் வரைப்பகம்

என்ற புறப்பாட்டுப் பகுதிகளில் இப்பெயரைக் காணலாம்.

இத்தமிழகத்தில் தலைமை பெற்ற நாடுகள் சேர நாடு, சோழநாடு, பாண்டிய நாடு என்பன. காட்டு நாடு, காரி நாடு, கொங்கு நாடு, கோணாடு, நாஞ்சில் நாடு, பறம்பு நாடு, பெண்ணை நாடு, முக்காவனாடு, வேங்கட நாடு என்னும் சிறு நாடுகளைப் போன்ற பல இத் தமிழகத்தில் இருந்தன. இந்நாட்டுக்குள் கூற்றம் என்னும் சிறு பிரிவுகள் உண்டு. அரசனுடைய தலைநகரங்களும், கடற்கரையில் வாணிகச் சிறப்புற்ற நகரங்களும், அரசர்களுடைய சமாதி களையுடைய ஊர்களும், போர் நடைபெற்ற இடங்களும், புலவர்களைப் பெற்ற ஊர்களுமாகப் பல ஊர்கள் புறநானூற்றுப் பாடல்களில் விரவிக் கிடக்கின்றன. சோழ :னுடைய உறையூரும் பாண்டியனுடைய மதுரையும் சேரனு டையவஞ்சியும் பெரும் புகழ் பெற்றவை, தகடுர், அரையம், மாவிலங்கை, முள்ளுர் முதலியன சிற்றரசர்களுக்குரிய ஆநகரங்கள். ஆடு து ைற, ஆலங்குடி, இடைக்குன்றுார்,