பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 50 கி. வா. ஜ. பேசுகிறார்

அவர்களிடமிருந்து தண்டத் தொடங்கினால் அரசனுக்கும் குடிகளுக்கும் ஒருங்கே கேடு வரும்.

பாண்டியன் அறிவுடை நம்பி என்னும் அரசனிடம் சில துர்மந்திரிகள் இருந்தார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு அரசன் அதிக வரியை வாங்கலாமென்று யோசித் தான். பிசிராந்தையாரென்ற புலவர் இதை அறிந்தார். பாண்டியனிடம் போய் வேடிக்கையாக ஒரு கதை சொல்பவ ரைப்போல ஆரம்பித்தார். 'ஒரு யானை: வயலில் முற்றி விளைந்த நெல்லை அதற்குக் கவளமாகக் கொடுத்தால், ஒரு மாநிலத்துக்குக் குறைவாக இருந்தால் கூட, அந்த யானைக்குப் பல நாள் உணவுக்கு ஆகும். யானையை அதன் போக்கிலே அவிழ்த்து விட்டுவிட்டால் என்ன ஆகும்? நூறு செய்யாகத்தான் இருக்கட்டுமே அதன் வாய்க்குள்ளே போவதைக் காட்டிலும் அதன் காலாலே மிதிபட்டு வீணாகப் போவது தான் அதிகமாக இருக்கும். இந்த உபமானத்தைச் சொல்லிவிட்டு மெல்ல விஷயத்துக்கு வருகிறார் புலவர்,

"அறிவுடைவேந்தன் முறைப்படி குடிமக்களிடம் வரியை வாங்கினால் நாடானது கோடி பொருளைக் கொடுத்து மேலும் மேலும் தழைக்கும். அறிவில்லாதவன் ஆளப் புகுந்து, அவனுடன் தலையாட்டும் மந்திரிகளும் சேர்ந்து கொள்ள, அன்பின்றி, மிகுந்த பணத்தை விரும்புவானா னால் யானை புகுந்த வயலைப்போலத் தானும் உண்ணான்; உலகமும் கெட்டுப் போகும்’ (184) என்று தைரியமாகச் சொல்லி விட்டார். கேட்டவன் பெயரளவில் அறிவுடை நம்பிய்ாக இல்லாமல் செயலிலும் அப்படி ஆகவேண்டு மென்று தான் அவர் எடுத்துரைத்தார். இதே விஷயத்தை ஒர் அரசனே வேறு விதமாகச் சொல்கிறான். சோழன் தலங்கிள்ளி என்பது அவ்வரசன் பெயர்.

"ஒருவர் பின் ஒருவராகப் பெரியவர்களை யமதர்ம