பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறும் சரித்திரமும் 151

ராஜன் கொண்டு போய் விட்டான். ஏதோ நல்ல வினைப் பயன் இவனிடம் அரசுரிமையையும் அரசச் செல்வத்தையும் கொண்டு வந்து தள்ளி யிருக்கிறது. இது தனக்குக் கிடைத்து விடவே நமக்குப் பெரிய அதிகாரம் கிடைத்து விட்டது: எண்றெண்ணிக் குடிகளிடம் வரியை வேண்டி இரக்கின் மானே, அந்த அரசன் சின்னத்தனம் உயைவன்' என்று அவன் சொல்கிறான். புறநானூற்றுப் பாஷையில் கூரில் ஆண்மைச் சிறியோன் என்று இருக்கிறது மிகுதியில்லாத ஆண்மையையுடைய உள்ளஞ் சிறியோன்' என்று உரையாசி ரியர் உரை எழுதுகிறார்.

வேந்தன் தன்னலம் கருதாமல் குடிமக்களின் நலத்தைக் காக்க வேண்டியவன்.'நீ வைத்திருக்கிற குடை உன்னுடைய உடம்பின்மேல் வெயில்படாமல் காப்பாற்றுவதற்காக இருப் பதன்று. குடிமக்களுக்கெல்லாம் நிழலாகிப் பாதுகாப்பது: என்று குடையின் கருத்தை ஒரு புலவர் தெரிவிக்கிறார்.

பகைவர்களால் நாட்டிற்கு எவ்வகைத் துன்பமும் நேராமல் அரசன் பாதுகாப்பான். அவனுடைய அன்பும் ஆற்றலும் குடிமக்களுக்கு இன்பத்தை உண்டாக்கித் துன்பத் தைப் போக்கும். சோறுண்டாக்கும் தீமையின்றி அவன் நாட்டினர் பகைவர் வைக்குந் தீயை அறியார். சூரியனது வெம்மையையன்றி வேறு வெம்மையை அவர்கள் அறியார். வானவில்லையன்றி வேறு வில்லை அறியார். உழவுக்குரிய கலப்பையன்றி வேறு படையை அவர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. புலி தன் குட்டிகளைக் காப்பதுபோல அரசன் குடிகளைப் பாதுகாப்பான்.

முறை வழங்குதல்

அரசன் நீதி வழங்குவதில் நடுநிலை பிறழாமல் இருக்க வேண்டியவன். அரசின் பெருமை யெல்லாம் அறநெறியை அடிப்படையாகக் கொண்டது. பிறர் கூறுவதைக் கேட்டு, ஆராயாமல் முடிவு செய்தல் தவறு. 'பிறர் பழி கூறுவோர்