பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 56 கி. வா. ஜ. பேசுகிறார்

ஒன்றுபட்டார்கள்: இந்த அதிசயத்தை ஒரு புலவர் கண்ணாரக் கண்டார். சோழன் பெருந்திருமாவளவனும் பாண்டியன் பெருவழுதியும் ஒருங்கிருந்தாரைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பார்த்தார்; ஆச்சரியத் தால் 32 அடிகள் கொண்ட ஒரு பாட்டைப் பாடி விட்டார் (58).

'பலராமனும் கண்ணபிரானும் ஒன்றாகச் சேர்ந்து நிற் பதுபோல எவ்வளவு அழகாக ஒன்றுபட்டு இருக்கிறீர்கள்! இதைக் காட்டிலும் இனிய காட்சியும் உண்டோ? நும் இசை வாழ்க! என்றும் இப்படியே நீங்கள் இருக்க வேண்டும், ஒருவர் ஒருவருக்கு உதவி செய்யுங்கள். இருவரும் சேர்ந்தி ருந்தால் இந்த உலகம் உங்கள் கையில் அகப்படுவது நிச்சயம் அன்புடன் இருக்கும் உங்களுக்கிடையே சில பேர் வருவார் கள்; மிகவும் நல்ல வார்த்தைகளைப் போல நயமாகச் சொல்வார்கள்; தொல்லோர் சென்ற நெறியென்று பேது வார்கள். அந்தப் பேச்சை நம்பாதீர்கள். உங்களிடையே அவை பிளவை உண்டு பண்ணிவிடும். அவர்களுடைய வார்த்தைகளைக் கொள்ளாதீர்கள். இன்றே போல்க நும் புணர்ச்சி?’ என்று வாயார வாழ்த்துகிறார்.

இதைவிடப் பெரிய அதிசயத்தைத் தமிழ்ப்பாட்டி ஒளவையார் கண்டார். சேரசோழபாண்டியர் மூவரும் ஒருங் கிருந்த புதுமையைக் கண்டு அவர் ஒரு செய்யுளால் வாழ்த் தினார். "நீங்கள் வாழ்க! உங்களைப் பார்த்தால் அந்தணர் வளர்க்கும் மூன்று அக்கினிகளைப்போல இருக்கிறீர்கள். வானத்து வயங்கித் தோன்றும் மீனினும், இம்மென இயங் கும் மாமழை உறையினும், உயர்ந்துமேந் தோன்றிப் பொலிகநும் நாளே” (367) என்று மூவரையும் ஆசீர்வதிக் கிறார். .

. பாணன் முதலிய பரிசிலர் புலவர்களின் நிலை இங்ங்ன்ம் ஆக, பாணன், விறலி முதலிய கலைஞர்களும் அரசனுடைய ஆதரவை முற்றும்