பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறும் சரித்திரமும் լ57

பெற்றனர். பாணன் தன் இசையாலும் விறவி தன் இசை யாலும் கூத்தாலும் மன்னரை மகிழ்விம்பர். புலவர், பாணன் முதலியவர்களுக்குப் பலவகைப் பொருளும், அருங் கலங்களும், யானை முதலியனவும் பரிசிலாக அரசர் தருவது வழக்கம். சிறப்பாகப் பாணர்களுக்குப் பொன்ன்ாலாகிய தாமரைப்பூவையும், விறலியர் அணிந்துகொள்ள இழையை ஆயும் தருவர்.

போர்

போர்க்கலையில் அரசர்கள் திறம்பெற நின்றதைப் புறநானுாறு நன்கு விளக்குகிறது. புறப்பொருள் துறை களில் பெரும்பாலான போர் சம்பந்தமான செய்திகளை உடையனவே தமிழர் போர் முறையைப்பற்றி சொல்ல வேண்டுமானால் அது மிக மிக விரியும். -

அவர்களுடைய போரை, 'அறத்தாறு துவலும் பூட்கை மறம்' என்று பாராட்டுகின்றனர். மதிவைப் பொருதலும், ஊரை முற்றுகையிட்டு உணவு வெளியிலிருந்து செல்லாமல் தடுத்தலும், மதிற்கதவுகளை யானையைக் கொண்டு உடைத்தலும் , நால்வகைப் படைகளோடு போர் புரிதலும் பிறவுமாகிய போர்வகை பல கடலில் நாவாய் செலுத்திக் கடற்போர் செய்தலும் தமிழருக்குப் புதிதன்று. -

மறவர்களின் வீரமும், படைத்தலைவர்களாகிய ஏனாதி களின் சிறப்பும், இளைப்புற்ற மன்னர்களைத் தாங்கும் துணையாக உதவும் தேர்வண் மலைவனைப் போன்ற வீரர் களின் பெருமையும், மறக்குடிப் பிற்ந்த பெண்டிரின் வீர உணர்ச்சியும் இன்ன தன்மைய என்று புலப்படுத்தும் பாடல்கள் பல. -

அரசர் தம் பகையரசர்களை வென்று களங்கொள்ளுத லும், அவர்களுடைய முரசு முதலியவற்றை அகப்படுத்தலும் கடிமரத்தை வெட்டுதலும், ஊரை எரித்தும் நீர்நிலைகளை உடைத்தும் வயல்களில் எரிபரப்பியும் பகைவர் தாட்டைப்