பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்ம் கிருஷ்ணையர் 159

வருகிறது. பெண்களுடைய சாரீரத்திலே அந்தக் கனத்தைப் பார்ப்பது அருமை; அது சிற்றருவிபோல் வருவது. சங்கீதத் ஒலே கனமென்றால் பாடுபவருடைய சாரீர லட்சணத்தை அனுசரித்த ஒரு வகை என்று மாத்திரம் நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம். கனம், நயம், தேசிகம் என்னும் மூன்று மார்க் கங்களிலே அது ஒன்று. மூலாதாரத்திலிருந்து பிரம்மரந்திரம் வரைக்கும் ஊடுருவி நிற்கும் தொனியோடு பாடுவது அந்த மார்க்கமாம். பழைய காலத்திலே இந்த மாதிரி மார்க்கம் தமிழ்நாட்டிலே இருந்ததாம். அதற்கு உள்ளாளப் பாட்டு என்ற தமிழ்ப் பெயர் இருந்தது. அதைப் பாடும்போது யானையின் முழக்கமும் சிங்க கர்ஜனையும் நினைவுக்கு வருமாம்.

கனம் கிருஷ்ணையர் சங்கீதத்திலே மத்தகஜந்தான். அவருடைய காலத்துக்குமுன் கனமார்க்கம் இந்தத் தமிழ் நாட்டிலே அதிகமாகப் பிரசாரத்தில் இல்லை. அவர் அதைப் புதிதாக அப்பியாசம் பண்ணி மிகவும் வல்லவரானார்.

ஏறக்குறைய நூறு வரு ஷங்களுக்கு முன் திருச்சிராப் பள்ளி ஜில்லா, உடையார்பாளையம் தாலூகா பெரிய திருக்குன்றம் என்ற ஊரில் வாழ்ந்த இராமசாமி ஐயரென்ற சங்கீத வித்துவானுக்குக் குமாரராகக் கிருஷ்ணையர் பிறந்தார். அவருக்கு நான்கு தமையன்மார் இருந்தனர். அவர்கள் அனைவரும் சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர்களே. ஆயினும் சுப்பராமையர் என்றவரும் கிருஷ்ணயருமே சங்கீத உலகத்தில் பிரசித்தியை அடைந்தவர்கள்.

ராமசாமி ஐயர் தம் குமாரர்கள் எல்லோருக்கும் சில காலம் சங்கீத அப்பியாசம் செய்து வைத்தார். பிறகு தஞ்சாவூர் ஸம்ஸ்தான வித்துவானாக விளங்கிய பச்சிை மிரியன் ஆதிப்பையரிடம் சிட்சை பயிலும்படி அவர்களை அனுப்பினர். கிருஷ்ணையர் அந்தப் பெரியாரிடம் சங்கீத அப்பியாசம் செய்தார். அவருக்கு அப்பொழுதே கீர்த்தனங்.